எல்பிட்டிய தேர்தலை முதலில் வெற்றிப்பெற்று காட்டுங்கள் ; சஜித்திற்கு ரோஹித சவால்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மக்களிடம் வாக்குகளை அல்ல அதிகாரத்தை வழங்குமாறு கேட்கிறார் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒருவர் முதலில் மக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமே தவிர அவர்களிடமிருந்து கோருவது நியாயமில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர், எல்பிட்டிய தேர்தலை முதலில் வெற்றிப்பெற்று காட்டுமாறும் சவால் விடுத்தார்.

பொதுஜன பெறுமுன தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாச தனக்கான அதிகாரத்தை வழங்குமாறு மக்களிடம் கோருகிறார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் முதலில் மக்களுக்கு அதிகாரத்தை ,நம்பிக்கையை வழங்கக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும், இவர் அதற்கு மாறாக இருக்கிறார்.

தற்போது மக்களிடம் அதிகாரத்தை கேட்கும் வேட்பாளர் எதிர் காலத்தில் தனது ஆட்சியை முன்னோக்கி எடுத்து செல்ல மக்களிடம் நிதியை கேட்கவும் தயங்க மாட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று திங்கட்கிழமை வேற்புமனு தாக்கல் செய்திருந்தார், ஆனால் கட்சி சார்பில் அவருக்கு ஆதரவாக கட்சி தலைவர் ரணில், கட்சியின் பொது செயலாளர் அகிலாவிராஜ்காரியவசம் ஆகிய எவரும் கலந்து கொண்டிருக்கவிலலை. ரணில் தரப்பு என்ற வகையில் எவரும் சமூகமளித்திருக்க வில்லை. ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஒரு ஒற்றுமை தன்மை இல்லாத நிலைமையை மக்கள் உட்பட எல்லோரும் தற்போது புரிந்து கொண்டிருப்பார்கள்.

எதிர் வரும் 11ம் திகதி இடம்பெறவிருக்கும் எல்பிட்டிய தேர்தலின் 17 தொகுதிகளில் உங்களால் முடிந்தால் ஒன்றிலாவது ஐக்கிய தேசிய கட்சியினரால் வெற்றிபெற முடியுமானால் வெற்றிபெற்று காட்டுங்கள். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் அவர்களுக்கு நாங்கள் சவால் விடுக்கிறோம்.

ஐ.தே.க தலைவர் ரணிலுக்கு மக்களின் ஒத்துழைப்பு பெற முடியாது , மக்களின் வாக்குகளை பெற முடியாது ஆனால் கட்சியை மட்டும் நன்றாக நடத்தி செல்ல முடியும். கோதாபய ராஜபக்க்ஷவை எதிர்த்து போட்டியிட சஜித்தை வேட்பளராக நியமித்த ரணில் நவம்பர் 16 ம் திகதிக்கு பின் சஜித் மூலம் தான் ஐ.தே.க என்று கூறிக்கொள்ள முடியாத அளவிற்கு திட்டம் வகுத்துள்ளார் என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!