நாளை எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான 28 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதில், 17 உறுப்பினர்கள் வட்டார அடிப்படையில் நேரடியாகவும், ஏனைய உறுப்பினர்கள் விகிதாசார முறைப்படியும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, ஜேவிபி ஆகிய ஐந்து கட்சிகள் போட்டியிடுகின்றன.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் பரப்புரைகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை காலை 7 மணி தொடக்கம் 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும்.

இந்த தேர்தலில் 53,384 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

நாளை மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்ததும், வாக்குகள் எண்ணும்பணி உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.

அடுத்தமாதம் சிறிலங்கா அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!