திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் யாழ். அனைத்துலக விமான நிலையம்

The Jaffna Palaly Airport will be developed as a regional airport and the inaugural ceremony is to be held at the Palali airport premises with the participation of Minister of Transport and Civil Aviation, Arjuna Ranatunga. The main objective of this development project is to launch a regional civil aviation zone between India and Sri Lanka by the first week of August. Once the project is completed a number of destinations like Mumbai, Hyderabad, Cochin, and Bangalore will be covered. On July 05, 2019, in Jaffna, Sri Lanka.
The total cost of the Jaffna Palali Airport Development project is Rs. 2,250 million. Accordingly, the Government is to invest Rs.
1950 million and Rs. 300 million has been given by the state of India as a loan.
Jaffna Airport also is known as Palaly Airport and SLAF Palaly, is an air force base and domestic airport in the town of Palaly in Jaffna District, Northern Province, Sri Lanka. Located approximately 16 km (9.9 mi) north of the city of Jaffna. (Photo by Akila Jayawardana/NurPhoto via Getty Images)
யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம், பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்காக, வரும் 17ஆம் நாள் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்காக, பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஓடுபாதையை தரமுயர்த்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது. சிவில் விமான சேவைகள் நிறுவனம், விமான நிலையத்துக்கான ஏனைய உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை முன்னெடுத்தது.

இந்த இரண்டு நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த தரமுயர்த்தல் பணிகள், நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் எல்லா அடிப்படை கட்டமைப்பு கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!