சுற்றுலா பயணியிடம் ரூ.5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரத்தை நூதனமாக திருடிய திருடன்!

பிரான்ஸ் நாட்டில் சிகரெட் புகைப்பதற்காக ஓட்டலுக்கு வெளியே வந்த சுற்றுலா பயணியிடம், சிகரெட் கேட்பது போல் நடித்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரத்தை கொள்ளையன் பறித்து சென்றுள்ளான். பாரீஸில் உள்ள நொப்போலியன் என்ற 5 நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த ஜப்பான் இளைஞர் ஒருவர், கடந்த திங்கள் கிழமை சிகரெட் புகைப்பதற்காக விடுதியின் வெளியே வந்துள்ளார். அப்போது அவரை நோக்கி வந்த பாரீஸை சேர்ந்த ஒருவர் நைசாக பேச்சுக்கொடுத்துள்ளார்.

அப்போது பேச்சுவாக்கில் இளைஞரிடம் சிகரெட் ஒன்றை கேட்ட அவர், இளைஞருக்கு கைக்கொடுப்பது போல் அவரது கையில் அணிந்திருந்த சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் பதித்த ரிச்சர்ட் மில்லே பிராண்ட் கடிகாரத்தை பறித்து சென்றுள்ளான். தாமதமாக இதனை உணர்ந்த இளைஞர், போலீசில் புகார் செய்தார். மேலும், கொள்ளையன் தன்னிடம் விட்டு சென்ற அவனது செல்போனையும் வழங்கயுள்ளார். அதனடிப்படையில் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!