புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’!

துபாயில் வசித்து வரும் இத்தாலி நாட்டை சேர்ந்த ஆண்டோனியோ விட்ரி என்பவர் இந்த செருப்பை வடிவமைத்து தயாரித்துள்ளார். 30 காரட் வைரங்கள் மற்றும் கடந்த 1579-ம் ஆண்டில் அர்ஜெண்டினாவில் கண்டெடுக்கப்பட்ட விண்கல் ஆகியவைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதன் குதிகால் பகுதியானது துபாயில் இருக்கும் உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1 கோடியே 99 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 141 கோடியே 11 லட்சம் ரூபாய்) ஆகும்.

ஏற்கனவே 1 கோடியே 55 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்ட செருப்பு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தது. தற்போது துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தங்க செருப்பு, அதனை முறியடித்து உலகிலேயே அதிக விலையுயர்ந்த செருப்பாக திகழ்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!