பசிக்கொடுமையில் பாகிஸ்தானை விட இந்தியா முன்னிலை!

உலகளாவிய பசி குறியீடு பட்டியல் அண்மையில் வெளியாகி உள்ளது. உலக அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் வாடுபவர்களை கணக்கெடுத்து அதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பசி குறியிடு பட்டியலின்படி, இந்தியா பசிக்கொடுமை பிரச்சினையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 117 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் நாடுகளை விட பின்தங்கிய நிலையில் இந்தியா உள்ளது.

2000-ஆம் ஆண்டில், 113 நாடுகள் கொண்ட பசி குறியீடு பட்டியலில் இந்தியா 83-வது இடத்தைப் பிடித்திருந்தது. இப்போது, 117 நாடுகள் பட்டியலில் உள்ள நிலையில், இந்தியா 102-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. பெலாரஸ், உக்ரைன், துருக்கி, கியூபா மற்றும் குவைத் உள்ளிட்ட பதினேழு நாடுகள் ஐந்துக்கும் குறைவான குறியீட்டெண்களுடன் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!