சிறிலங்கா கடற்படையின் ‘காலி கலந்துரையாடல்’ இன்று ஆரம்பம்

சிறிலங்கா கடற்படை ஆண்டு தோறும் நடத்தும், ‘காலி கலந்துரையாடல்- 2019’ என்னும், கடல் பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு கோல்பேஸ் விடுதியில் இன்று ஆரம்பமாகும் இந்த மாநாடு, நாளை வரை தொடர்ந்து இடம்பெறும்.

இந்த மாநாட்டில் 55 நாடுகள், 10 அனைத்துலக அமைப்புகள், 3 பாதுகாப்பு தொழில்துறைகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

இது சிறிலங்கா கடற்படை நடத்தும், 10 ஆவது மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது,

அதேவேளை இந்த மாநாட்டில் பங்கேற்கும், அனைத்துலக கடற்படை பிரதிநிதிகள், சிறிலங்கா கடற்படையின் சித்திரவதை முகாம்கள் தொடர்பாக நடக்கின்ற விசாரணைகளுக்கு, கடற்படை ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என, அனைத்துலக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யஸ்மின் சூகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!