ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகளால் அமோக வெற்றி

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரிக்கு இந்தமுறை 62.3 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக இறுதி முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் விபரம் –

ஹரி ஆனந்தசங்கரி – லிபரல் கட்சி – 31,339 – 62.3 %
பொப்பி சிங் – கொன்சர்வேட்டிவ் கட்சி – 10,088 – 20.1 %
கிங்ஸ்லி வோக் – புதிய ஜனநாயக கட்சி – 5,735 – 11.4 %
ஜெசிக்கா ஹமில்டன் – கிறீன் கட்சி – 2,324 – 4.6 %
டிலானோ சாலி – மக்கள் கட்சி – 466 – 0.9 %
மார்க் தேடோரூ – கிறிஸ்தவ பாரம்பரிய கட்சி – 353 – 0.7 %
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் – 76,408
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 50,305

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!