வெற்றியின் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பினூடாக ரணில் அரசாங்கத்தை நீக்குமாறு கோத்தாவிடம் தயாசிறி கோரிக்கை

கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை பதவி நீக்கி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சர்வசஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றி பெறுவார். அவர் வெற்றி பெற்றாலும் அரசியலமைப்பின் படி மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கலைக்கப்படாது. எனினும் குறுகிய காலமானாலும் மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்ய முடியாது.

எனவே நாட்டு மக்கள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு எதிராக சமர்பிக்கும் குற்றப்பிரேரணையைப் போன்று கோத்தாபய ராஜபக்ஷ சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். மாறாகும் கட்சியின் தீர்மானமாக இதனைக் கருதக் கூடாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!