பீதியடைய வேண்டாம் – பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை!

நாட்டில் தற்போது எந்தவித அவசர நிலைமையோ, தீவிரவாதிகளின் அச்சுறுத்தலோ இல்லை என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பரப்பி வரும் போலியான தகவல்களால் அச்சப்பட வேண்டாம் என்று ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன அறிவித்துள்ளார்.

அரச நிறுவனங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மற்றும் பொது மக்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அரச நிறுவனங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்புகள் உறுதி செய்வது தொடர்பில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மற்றும் கடிதங்கள் வெளியிடப்பட்டன. அதனை அடிப்படையாக கொண்டு தற்போது அவசர நிலைமை ஏற்பட்டுள்ளதாக போலி தீவிரவாத அச்சங்களை ஏற்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவ்வாறு அவசர நிலைமை மற்றும் தீவிரவாத ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பரவும் தகவல் தொடர்பில் ஏமாற்றமடைய வேண்டாம் என பொதுமக்களிடம், ஜனாதிபதியின் செயலாளர் கேட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!