படையினர் பொதுமக்களை குறி வைத்ததற்கு ஆதாரம் இல்லை – ராஜித

போரின் போது சிறிலங்கா படையினர் வேண்டுமென்றே பொதுமக்களைக் கொன்றனர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று, சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“போரின் போது சிறிலங்கா இராணுவம் பொதுமக்களை குறிவைத்து தாக்கியதாக, குற்றம்சாட்டிய, தருஸ்மன் குழு அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

படையினர் வேண்டுமென்றே பொதுமக்களைக் கொன்றதை நிரூபிக்க, அரசாங்கத்திடம் ஆதாரங்கள் இல்லை.

மோதல்களுக்கிடையில் அகப்பட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதை, பொதுமக்கள் நேரடியாக இலக்கு வைக்கப்பட்டனர் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.” என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!