இரண்டு மாதமாக தொடர் தூக்கத்தில் இருக்கும் இளம்பெண்…!

கொலம்பியா நாட்டில் விசித்திர நோய் காரணமாக இளம்பெண் ஒருவர் தொடர்ந்து 2 மாதமாக தூக்கத்தில் இருந்துவரும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது.கொலம்பியாவில் Kleine-Levin syndrome எனும் விசித்திர நோயால் 17 வயதான Sharik Tovar என்ற இளம்பெண் கடந்த இரண்டு மாதமாக தூக்கத்தில் இருந்து வருகிறார்.இதனால் அவரது நினைவுத் திறனும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Sharik Tovar நீண்ட தூக்கத்தில் இருப்பதால், அவரது தாயார் உணவு பொருட்களை திரவமாக மாற்றி, இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஊட்டி விடுகிறார்.இதுபோன்ற தூக்க நிலையில் இருக்கும் 40 நோயாளிகளே உலகமெங்கும் இருப்பதாக கூறப்படுகிறது.கடந்த ஆண்டு Sharik Tovar மொத்தம் 48 நாட்கள் தொடர்ந்து தூக்கத்தில் இருந்ததாக கூறும் அவரது தாயார்,

அதன் பின்னர் அவரது நினைவுத் திறன் பாதிக்கப்பட்டதாகவும், தாயாரான தம்மை அவர் யார் என விசாரித்ததாகவும் நினைவு கூர்ந்துள்ளார்.தற்போது தமது மகளுக்கு ஊட்டுவதற்காக திரவ வடிவிலான உணவுகளை வழங்க வேண்டும் என தேசிய சுகாதார சேவை அமைப்பிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.மட்டுமின்றி நரம்பியல் தொடர்பான சிகிச்சைக்கு உதவுமாறும் கோரியுள்ளார்.இரண்டு மாத காலம் தேசிய சுகாதார சேவை அமைப்பிடம் இருந்து உணவு பொருட்கள் தமக்கு கிடைக்கவில்லை என கூறும் அவர், அதன் பின்னர், உணவை திரவமாக மாற்றி மகளுக்கு ஊட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!