கனடாவில் பெண்மணியை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய ஆப்பிள் கடிகாரம்!

ஆப்பிள் வாட்ச் மூலம் ஆபத்தில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள் ஏராளம் எனலாம். பலரின் உயிரை காப்பாற்றிய பெருமை கொண்ட ஆப்பிள் வாட்ச் சமீபத்தில் பெண்மணியின் உயிரை காப்பாற்றி இருக்கிறது. கனடாவின் கல்கரி பகுதியை சேர்ந்த பெண்மணி தன்வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் மர்ம நபர் மறைந்திருப்பதை அவர் கண்டு அதிர்ந்தார். வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்ததும், அவர் உதவிக்கு போன் அழைக்க முயன்றார். எனினும் அவர் அருகில் போன் இல்லாததால் அவரால் யாருக்கும் அழைப்பை மேற்கொள்ள இயலவில்லை. பின் அவர் அணிந்து இருந்த ஆப்பிள் வாட்ச் கொண்டு தான் ஆபத்தில் சிக்கியிருக்கும் தகவலை தனது நண்பருக்கு தெரியப்படுத்தினார்.

இதை அறிந்த நண்பர் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டார். அதிரடியாக ஆபத்தில் சிக்கிய பெண்மணி வீட்டிற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் மர்ம நபரிடம் இருந்து அவரை மீட்டனர். பின் வீட்டில் மறைந்து இருந்த ஜான் ஜோசப் மசின்டோ என்பவரை கைது செய்தனர். விசாரணையில் பெண்மணியை பாலியில் ரீதியில் அச்சுறுத்தும் நோக்கில் வீட்டிற்குள் நுழைந்ததாக ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பையில் கத்தி, கயிறு, ஆணுறை மற்றும் பல்வேறு பொருட்கள் இருந்தன.

மேலும் கைது செய்யப்பட்டவரிடம் பெண்மணியின் வீட்டு நுழைவு அட்டை, போலி சாவிகள் உள்ளிட்டவையும் இருந்ததாக தகவல் கூறப்படுகிறது. எனினும், ஆப்பிள் வாட்ச் உதவியுடன் பெண்மணி எவ்வித பாதிப்பும் இன்றி காப்பாற்றப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!