அதி­க­ரித்துவரும் வன்­மு­றை­களும் வேட்­பா­ளர்­களின் வாக்­கு­று­தி­களும்

ஜனா­தி­பதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் வாக்­கு­று­திகள் அதி­க­ரித்­து­வ­ரு­வ­துடன் தேர்தல் முறை­கே­டுகள் மற்றும் வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்­பான முறைப்­பா­டு­களும் அதி­க­ரித்து வரு­வ­தனை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பாக 1835 முறைப்­பா­டுகள் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு கிடைத்­துள்­ளன. ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்­பு­மனு கோரப்­பட்ட ஒக்­டோபர் 7ஆம் திக­தி­யி­லி­ருந்து கடந்த 26ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தி­க­ளி­லேயே இத்­த­கைய முறைப்­பா­டுகள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இதில் மாவட்ட மட்ட, மத்­திய நிலை­யங்­க­ளி­லி­ருந்து 1249 முறைப்­பா­டு­களும் தேசிய தேர்தல் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்­துக்கு 586 முறைப்­பா­டு­களும் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. தேர்தல் நெருங்க நெருங்க இந்த முறைப்­பா­டு­களின் எண்­ணிக்கை இன்­னமும் அதி­க­ரிக்­க­லா­மென அஞ்­சப்­ப­டு­கின்­றது.

நாட்டில் மக்­களின் ஜன­நா­யக உரி­மை­யான வாக்­க­ளிக்கும் உரி­மையை பாது­காக்கும் வகையில் ஜனா­தி­பதி தேர்­த­லா­னது நீதி­யா­ன­தா­கவும் சுதந்­தி­ர­மா­ன­தா­கவும் நடத்­தப்­ப­ட­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும். தேர்தல் சட்ட விதி மீறல்கள் வன்­மு­றைகள் அற்ற வகையில் தேர்­தலை நடத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. ஆனால் தற்­போ­தைய நிலையில் அர­சியல் கட்­சிகள் மத்­தியில் ஏற்­பட்­டுள்ள போட்டா போட்டி நிலைமை தேர்தல் சட்­ட­விதி மீறல்­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்­தலில் இரண்டு இலட்சம் அரச ஊழி­யர்கள் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­துடன் வாக்­கெண்ணும் பணி­களில் மட்டும் சுமார் 48 ஆயிரம் அரச ஊழி­யர்கள் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர். அத­னை­விட ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான அரச ஊழி­யர்கள் வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் பணிக்கு அமர்த்­தப்­ப­ட­வுள்­ளனர். இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக சுமார் 10 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் நலன்­புரி மற்றும் போக்­கு­வ­ரத்து கட­மை­களில் ஈடு­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. குறைந்த பட்சம் ஒரு வாக்­க­ளிப்பு நிலை­யத்தில் 8 அரச ஊழி­யர்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­டுவர் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட தேர்தல் தின பாது­காப்பு விட­யங்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்­க­ளமும் திட்­டங்­களை வகுத்­துள்­ளது. குறிப்­பாக வாக்­க­ளிப்பு நிலை­யங்­களின் நேரடி பாது­காப்­புக்கு மட்டும் சுமார் 60 ஆயிரம் பொலி­ஸாரை கட­மையில் ஈடு­ப­டுத்த பொலிஸ் திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது. ஒரு வாக்­க­ளிப்பு நிலை­யத்­துக்கு குறைந்த பட்சம் ஆயுதம் தரித்த இரு பொலிஸார் பாது­காப்­ப­ளிக்­க­வுள்­ள­துடன் இந்த எண்­ணிக்கை தேவைக்­கேற்ப மாறு­படும் என்றும் பொலிஸ் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இவ்­வாறு தேர்­தலை நீதி­யா­கவும் சுதந்­தி­ர­மா­கவும் நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை தேர்தல் ஆணைக்­கு­ழுவும் பொலிஸ் திணைக்­க­ளமும் மேற்­கொண்டு வரு­கின்­றன. ஆனாலும் தேர்தல் விதி­முறை மீறல்கள் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்து வரு­கின்­ற­மை­யினால் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­ப­ட­லாமோ என்ற அச்­சமும் மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இத்­த­கைய வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்தி நீதி நியா­ய­மான தேர்தலுக்கு வழி சமைக்க வேண்­டி­யது அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளது பொறுப்­பா­க­வுள்­ளது.

வன்­மு­றைகள் இவ்­வாறு பதி­வா­கி­வரும் நிலையில் தேர்­தலில் போட்­டி­யிடும் பிர­தான அர­சியல் கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் பெரு­ம­ள­வான வாக்­கு­று­தி­களை வழங்கி வரு­கின்­றனர். நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்று வலி­யு­றுத்தி வரும் வேட்­பா­ளர்கள் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் வாழ்க்கைச் செலவைக் குறைப்­ப­தற்கு முயற்சி மேற்­கொள்­ளப்­படும் எனவும் அறி­வித்­துள்­ளனர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை பொதுஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெளி­யிட்­டி­ருந்தார். அதில் பல்­வேறு விட­யங்கள் குறித்தும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். நாட்டில் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கு­வ­தற்கு பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு அமைக்­கப்­படும், ஒற்­றை­யாட்சி பௌத்­தத்­துக்கு முன­னு­ரிமை வழங்­கப்­படும். தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள உயர்வு வழங்­கப்­படும். ஏப்ரல் 21 தாக்­குதல் குறித்து ஆராய ஆணைக்­குழு அமைக்­கப்­படும். காணிப் பிரச்­சி­னையைத் தீர்க்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். வற் வரி குறைக்­கப்­படும் உட்­பட பல்­வேறு வகை­யான வாக்­கு­று­தி­களை அவர் வழங்­கி­யி­ருக்­கின்றார். 10 அம்ச திட்­டங்­களின் அடிப்­ப­டையில் அவ­ரது உறு­தி­மொழி அமைந்­தி­ருக்­கின்­றது.

இதே­போன்றே ஜே.வி.பி.யின் வேட்­பாளர் அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவும் தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை சனிக்­கி­ழமை வெளி­யிட்­டுள்­ள­துடன் பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளையும் அவர் வழங்­கி­யி­ருக்­கின்றார். இரு தரப்­பிலும் இடம்­பெற்ற யுத்தக் குற்றம் குறித்து விசா­ரணை நடத்த ஆணைக்­குழு அமைக்­கப்­படும் என்றும் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் அவர் உறுதி வழங்­கி­யி­ருக்­கின்றார்.

ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­பனம் அடுத்த வாரம் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. அதற்கு முன்­ன­ரேயே வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச நாட்டு மக்­க­ளுக்கு பல்­வேறு வித­மான வாக்­கு­று­தி­களை வழங்கி வரு­கின்றார். தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1500 ரூபா சம்­பள உயர்வு வழங்­கப்­படும். நாட்டின் பாது­காப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்கு, பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு, விவ­சா­யி­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கைகள் எடுக்­கப்­படும் என்­பன உட்­பட வெவ்­வேறு தேர்தல் மேடை­க­ளிலும் வெவ்­வேறு வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

வடக்கு கிழக்கு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­ற­போதிலும் அந்த விடயம் தொடர்பில் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முழு­மை­யாக குறிப்­பி­ட­வில்லை. அர­சியல் தீர்வு தொடர்பில் எத்­த­கைய நட­வ­டிக்கை எடுப்பேன் என்­பது குறித்து எந்த விட­யமும் கோத்­த­பாய ராஜபக் ஷவி­னது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. இவ­ரது தேர்தல் விஞ்­ஞா­பனம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆராய்ந்­துள்­ள­தா­கவும் விரைவில் அது தொடர்பில் விரி­வான அறிக்­கை­யொன்­றினை கூட்­ட­மைப்பு வெளி­யிடும் என்றும் அதன் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­திலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு தொடர்பில் திட்­டங்கள் உள்­ள­டக்­கப்­ப­டுமா என்­பது தொடர்­பிலும் தற்­போது கேள்வி எழுந்­தி­ருக்­கி­றது. ஏனெனில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு தொடர்பில் கோரிக்கை விடுக்­கும்­போது அதனை தென்­ப­குதி அர­சியல் தலை­மைகள் இன­வாதக் கண்­ணோட்­டத்­துடன் பார்க்கும் நிலைமை மேலோங்­கி­யி­ருக்­கின்­றது.

வடக்கு கிழக்கு தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னைகள் மற்றும் அடிப்­படைப் பிரச்­சி­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணும் வகையில் ஐந்து கட்­சிகள் ஒன்­றி­ணைந்து பொது­வான இணக்­கப்­பாடொன்­றுக்கு வந்­தி­ருந்­தன. இந்த விட­யங்கள் தொடர்பில் 13 அம்சத் திட்­ட­மொன்றும் தயா­ரிக்­கப்­பட்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

ஆனால் அந்த திட்டம் சமர்ப்­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­ன­ரேயே தென்­ப­கு­தியில் அர­சியல் சுய லாபத்­துக்­காக இன­வாத பிர­சாரம் மேற்­கொள்­ளப்­பட்­டது. இத­னை­ய­டுத்து பொது­ஜன பெர­மு­னவின் கோத்­த­பாய ராஜபக்ஷ இந்தத் திட்­டத்தை நிரா­க­ரித்­த­துடன் இது­கு­றி­த்து பேசு­வ­தற்கே தயா­ரில்லை என்று அறி­வித்­தி­ருந்தார். புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச சார்­பிலும் இன்­னமும் இந்தத் திட்டம் தொடர்பில் உரிய நிலைப்­பாடு தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

இரு பிர­தான வேட்­பா­ளர்­களும் நாட்டு மக்­க­ளுக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கி­வ­ரு­கின்­ற­போ­திலும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் இன்­னமும் அவர்கள் இரு­வரும் வாய் திறக்­க­வில்லை என்று கூற­வேண்­டி­யுள்­ளது. இத்­த­கைய நிலைப்­பாடு மாற வேண்டும்.

இதே­போன்றே மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­களின் விட­யங்கள் தொடர்­பிலும் இரு­த­ரப்­பி­னரும் வாக்­கு­றுதி வழங்கி வரு­கின்­றனர். பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பளம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தான் ஜனாதிபதியானவுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவேன் என்று சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தால் அல்லது வாக்குறுதிகளை அளித்தால் மாற்றுத் தரப்பு அதனை இனவாதக் கண்ணோட்டத்துடன் அணுகி சிங்கள மக்களின் வாக்குகளில் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று பிரதான வேட்பாளர்கள் கருதுவதாகவே தெரிகின்றது.

தற்­போ­தைய நிலையில் தேர்­தலில் போட்­டி­யிடும் பிர­தான வேட்­பா­ளர்கள் வாக்­கு­று­தி­களை வழங்கி வரு­கின்­றனர். ஆனால் வழங்­கப்­படும் வாக்­கு­று­திகள் தேர்­த­லுக்குப் பின்னர் நிறை­வேற்றக் கூடி­ய­தாக அமை­ய­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாகும். ஏனெனில் தேர்தல் வெற்­றிக்­காக வாக்­கு­று­தி­களை வழங்­கி­விட்டு அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தா­து­விட்டால் மக்கள் மத்­தியில் அதி­ருப்­தியே ஏற்­படும். எனவே இதனை உணர்ந்து வேட்­பா­ளர்கள் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!