ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி.. உயிர் தப்பிய பிஞ்சு குழந்தை…!

இந்தியாவின் தெலுங்கான மாநிலத்தில் 15 நாட்களுக்குள் அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு வெவ்வேறு தலைமுறையினர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை 30ம் திகதி செகந்திராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் டெங்கு நோயால் 29 வயதான சோனி என்ற பெண் உயிரிழந்தை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மஞ்சேரியல் மாவட்டத்தைச் நிறைமாத கர்ப்பிணி பெண் சோனி, பிரசவத்திற்காக கடந்த 28ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செவ்வாய்க்கிழமை 28ம் திகதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, குழந்தை தான் அந்த குடும்பத்தில் உயிருடன் இருக்கும் ஒரே உறுப்பினர். புதன்கிழமை தனது தாயின் உடலை உறவினர்கள் மஞ்சேரியலுக்கு எடுத்துச் சென்ற நிலையில் குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 16ம் திகதி டெங்குவால் பாதிக்கப்பட்ட சோனியின் கணவர் குடிமல்ல ராஜகட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குடும்பத்தில் முதல் நபராக டெங்குவிற்கு பலியானார்.

இந்த துக்கத்திலிருந்து குடும்பம் மீளாத நிலையில், ராஜகட்டின் தாத்தா 70 வயதான Lingaiah-வும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 20ம் திகதி Lingaiah பரிதாபமாக வீட்டிலேயே உயிரிழந்தார்.

டெங்கு நோய் சோனியையும், அவரின் 5 வயதான மகள் வர்ஷினியையும் விட்டு வைக்கவில்லை. அக்டோபர் 27ம் திகதி தீபாவளி அன்று டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட வர்ஷினி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, பிரசவத்திற்காக 28ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி சோனிக்கும் டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

29ம் திகதி ஆண் குழந்தை ஈன்ற சோனி, 30ம் திகதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஒட்டுமொத்த குடும்பமும் டெங்கு நோயால் உயிரிழந்துள்ள நிலையில்.

டெங்கு நோயை ஏற்படுத்தும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் தேங்கி நிற்கும் நீர், அவர்களது வீட்டிற்கு அருகில் எங்காவது அமைந்திருக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், தண்ணீரின் மாதிரிகள் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!