எதிரணியில் ராஜபக்ஷக்களே தொடர்ந்து ஜனாதிபதி பந்தயத்தில் ஓடுகின்றனர் – ராஜித

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் என்ற ஓட்டப்பந்தயத்தில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்தினோம். இப்போது அவரை விடவும் சக்தி வாய்ந்த, திறமையான சஜித் பிரேமதாசவை நிறுத்தியிருக்கிறோம். எதிர்காலத்தில் ஜனநாயகத்தை முன்நிறுத்தி வேறொரு புதியவர் வருவார். ஆனால் எதிரணியில் ராஜபக்ஷாக்களே தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஏனையோர் வெளியில் நின்று கைதட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு முழுமையான ஆதரவை வழங்கி, அவரை தேர்தலில் வெற்றி பெறச்செய்வதை நோக்கில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து புரிந்துந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ‘ஜனநாயக தேசிய முன்னணி’ என்ற பெயரில் ஒன்றிணையும் நிகழ்வு இன்று காலை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!