ரஷியாவில் மலைபாதையில் நடந்து சென்று தபால் வழங்கும் 83 வயதாகும் மூதாட்டி!

ரஷியாவில் 83 வயதாகும் மூதாட்டி ஒருவர், தள்ளாத வயதிலும் மலைபாதை வழியே நடந்து சென்று தபால்களை வழங்கும் பணியில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். ரஷியாவின் காகசஸ் குடியரசிலுள்ள வடக்கு ஒசட்டியாவை சேர்ந்த அந்த மூதாட்டியின் பெயர் எகாடிரினா ஜலாஇவா (Ekaterina Dzalaeva) ஆகும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர், மலைப்பாதை வழியே நடந்து சென்று, மிஸூர், புரோன், சேய் ஆகிய பகுதி மக்களுக்கு தபால்களை விநியோகித்து வருகிறார்.

வாரம் 6 நாள்களுக்கு அப்பகுதியில் நடந்து சென்று இந்தப் பணியை அவர் செய்து வருகிறார். 2ம் உலகப் போர் காலத்தில் தபால்காரர் ஒருவரின் சேவையால் ஈர்க்கப்பட்டு, இந்த வேலைக்கு வந்ததாக மூதாட்டி எகாடிரினா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். உழைப்பின் மீதுள்ள மூதாட்டி எகாடிரினாவின் ஆர்வத்தை கண்டு, மலைபாதை சாலையில் வாகனங்களில் செல்லும் சிலர், தங்களது வாகனத்தை நிறுத்தி, அதில் அவரை அழைத்து செல்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!