கோத்தாபய திருட்டுத்தனமாக கைச்சாத்திட்ட எக்ஸா ஒப்பந்தத்தைப் போன்றதல்ல எம்.சி.சி ஒப்பந்தம் – சம்பிக்க

மிலேனியம் சலென்ஞ் உடன்படிக்கை என்பது கோத்தாபய ராஜபக்ஷ யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட எக்ஸா ஒப்பந்தத்தைப் போன்றதல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த ஒப்பந்தம் நாட்டிற்கு நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளத்தக்க வகையில் வெளிப்படைத்தன்மையுடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையின் பிரதி நிதியமைச்சரால் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதனை நாட்டிலுள்ள அனைவரும் பார்வையிட முடியும். இந்நிலையில் அமெரிக்காவிற்கு எமது அரசாங்கம் காணிகளை வழங்கப்போவதாகவும், அந்த உடன்படிக்கையினால் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறுகின்றவர்கள், இணையத்திலுள்ள உடன்படிக்கையின் பிரதியைப் படித்து எந்த சரத்தில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை 24 மணித்தியாலத்திற்குள் வெளியிட வேண்டும் என்றும் சம்பிக ரணவக்க சவால் விடுத்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!