சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களே வெற்­றி­யா­ளரை தீர்­மா­னிக்கும்

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்­கின்­றன. தேர்தல் பிர­சாரக் கூட்­டங்கள் சூடு­பி­டித்­துள்­ளன. வெற்றி பெறும் வேட்­பா­ளர்கள் என்ற நம்­பகத் தன்­மையைக் கொண்­ட­வர்­க­ளான சஜித் பிரே­ம­தா­ஸ­வி­னதும், கோத்­த­ாபய ராஜ­ப­க் ஷ­வி­னதும் தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் பெரும் சனத்­திரள் காணப்­ப­டு­கி­றது. இதனால், எந்த வேட்­பாளர் வெற்றி பெறுவார் என்று உறுதி கூற முடி­யா­துள்­ளது.

ஆயினும், சிங்­களப் பிர­தே­சங்­களில் மேற்­படி இரு வேட்­பா­ளர்­க­ளி­னதும் பொதுக் கூட்­டங்­களில் கலந்து கொள்ளும் மக்கள் தொகையின் அடிப்­ப­டையில் பெரும்­பாலும் பெரும்­பான்மை மக்­களின் வாக்­குகள் ஏறத்­தாழ சம­மா­கவே இருக்கும் என புரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. இதனால், சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­கள் தான் ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ளரை தீர்­மா­னிக்க இருக்­கின்­றன. சிங்­கள மக்­களை போன்று சிறு­பான்மை மக்­களும் இரு வேட்­பா­ளர்­க­ளுக்கும் சம­மாக வாக்­க­ளிப்­பார்கள் என்று சொல்ல முடி­யாது.

சிறு­பான்மைக் கட்­சிகள்

ஜனா­தி­பதித் தேர்­தலில் ஒரு தீர்க்­க­மான முடி­வினை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இன்னும் எடுக்­க­வில்லை. இதனால், தபால் மூல வாக்­கு­களை தாம் விரும்­பி­ய­வாறு அளிக்­கு­மாறு அக்­கட்சி தமது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு தெரி­வித்­துள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இவ்­வாறு அறி­வித்­துள்­ளமை ஒரு சாணக்­கி­ய­மான முடி­வாகும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முடி­வினை பௌத்த இன­வா­தி­களும், இன­வாத தேரர்­களும் அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒரு வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு என்று நேர­டி­யாக அறி­வித்தால், குறிப்­பிட்ட அந்த வேட்­பாளர் இன­வா­திகள் ஆத­ரிக்கும் வேட்­பா­ள­ராக இல்­லா­தி­ருந்தால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வடக்­கையும், கிழக்­கையும் பிரித்துக் கொடுக்கப் போகின்­றார்கள் என்று மிகப்பெரி­ய­தொரு இன­வாத பிர­சார பிர­ள­யத்­தையே எடுப்­பார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எந்த ஜனா­தி­பதி வேட்­பா­ளரை ஆத­ரித்­தாலும் இதுதான் நிலை­யாகும். இதனால், ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து தமது நிலைப்­பாடு என்­ன­வென்­ப­தனை, இறுதிக் கட்­டத்­தி­லே­யேதான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அறி­விக்கும் எனத் தெரி­கின்­றது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.சுமந்­திரன் தென்­ம­ராட்­சியில் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் உரை­யாற்றும் போது, ஜனா­தி­பதித் தேர்­தலில் நல்­லவர் யார், கெட்­டவர் யார் என்று நாம் ஆராய்ந்து கொண்­டி­ருக்க முடி­யாது. இரு­வரும் கெட்­ட­வர்கள் தான். சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் தேவை­யில்லை என்று கோத்­த­ாபய ராஜ­ப­க் ஷ ­ஏற்­க­னவே கூறி­விட்டார்.
சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் நாம் எமது நிலைப்­பா­டுகள் தொடர்பில் பேசலாம். எமது இனத்­தையே அழித்­த­வர்கள் ராஜ­ப­க் ஷாக்கள். ஆகவே, நாம் நிதா­ன­மாகச் செயற்­ப­ட­வேண்டும். சில வேளை­களில் நாம் வெற்றி பெற வேண்டுமென்று நினைக்­கின்ற வேட்­பாளர் எமது அறி­விப்பால் தோல்­வியைத் தழு­வலாம். அவ்­வா­று தான் தென்­னி­லங்­கையின் நிலைமை உள்­ளது. இந்த இடத்தில் நாம் நிதா­னத்­து­டனும் பொறு­மை­யு­டனும் சிந்­தித்து முடி­வெ­டுக்க வேண்டும். தென்­னி­லங்­கையின் வெற்றி வேட்­பா­ள­ராகக் கோத்­த­ாபய உள்ளார். எமது வாக்­குகள் பொன்­னா­னவை.

தமி­ழர்கள் என்­றில்­லாமல் சிறு­பான்­மை­யின தமிழ்ப் பேசும் மக்கள் அனை­வரும் ஒன்­றாக ஒரு­வரைத் தெரிவு செய்­தால்தான் எமது குறிக்­கோளை நாம் அடை­யலாம் என்று தெரி­வித்­துள்ளார். இவ­ரது இக்­க­ருத்­துக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இறுதி நேரத்தில் யாரை ஆத­ரிக்கும் என்று தெரிய வரு­கின்­றது.

இதேவேளை, முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்குக் கூட்­டணி உள்­ளிட்ட கட்சிகள் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன. தேசிய காங்­கிரஸ், ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பு கோத்­த­ாபய­வுக்கு ஆத­ரவு அளித்­துள்­ளன. இதன்­படி சிறு­பான்­மை­யினர் மத்­தியில் அதி­க­ளவு மக்கள் ஆத­ரவைக் கொண்ட கட்­சிகள் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு ஆத­ரவு அளித்துக் கொண்­டி­ருப்­ப­தனால், சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­கு­களில் அதி­க­மா­னவை சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு அளிக்­கப்­பட வாய்ப்­புக்கள் உள்­ளன.

முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் செய­லா­ளரும், ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பின் செய­லா­ள­ரு­மான எம்.ரி.ஹஸன்­அலி கோத்­த­ாப­ய­வுக்கு ஆத­ரவு அளிப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்ளார். ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பின் உயர்­பீடக் கூட்­டத்­தி­லேயே இந்த முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக ஊட­கங்­களில் அறி­வித்­துள்ளார். இக்­கட்­சியின் தவி­சா­ள­ராக முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் தவி­சாளர் பசீர் சேகு தாவூத் செயற்­ப­டு­கின்றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஹஸன்­அ­லியும், முஸ்லிம் காங்­கி­ரஸும் மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் அர­சி­ய­லுக்கு எதி­ராக செயற்­பட்­டமை நினைவிற் கொள்­ளத்­தக்­கது. 2005, 2010, 2015ஆம் ஆண்­டு­களில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்­த­ ரா­ஜபக் ஷ போட்­டி­யிட்ட போதிலும், முஸ்லிம் காங்­கிரஸ் அவரை ஆத­ரிக்­க­வில்லை. ஆயினும் 2005ஆம் ஆண்டும், 2010ஆம் ஆண்டு முஸ்லிம் காங்­கிரஸ் மஹிந்­தவின் அர­சாங்­கத்தில் இணைந்து செயற்­பட்­டது. மஹிந்­தவின் அர­சாங்­கத்தில் பெருந்­தோட்ட துணைப் பயிர் அபி­வி­ருத்தி பிரதி அமைச்­ச­ராக ஹஸன்­அலி நிய­மிக்­கப்­பட்டார். ஆயினும், ஹஸன் அலிக்கும் மஹிந்த அர­சாங்­கத்­துக்கும் நல்ல உறவு இருக்­க­வில்லை. ஹஸன்­அ­லியின் சமூகம் சார்ந்த அறிக்­கைகள் மஹிந்­தவை எரிச்­ச­ல­டையச் செய்­தது. அம்­பாறை கச்­சே­ரியில் நடை­பெற்ற மாவட்ட அபி­வி­ருத்திக் குழுக் கூட்­டத்தில் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பசில் ராஜ­பக் ஷ ஹஸன்­ அ­லியின் முன் மொழி­வு­களை முற்­றாக நிரா­க­ரித்தார். இந்­த­ள­விற்கு அர­சாங்­கத்­திற்கும் ஹஸன்­அ­லிக்கும் முரண்­பா­டுகள் காணப்­பட்­டன.

அது­மட்­டு­மன்றி, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்ற அநி­யா­யங்­களை ஒரு ஆவ­ண­மாக தயா­ரித்து இலங்கை வந்த அன்­றைய மனித உரி­மைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவ­நீதம்­பிள்­ளை­யிடம் ஹஸன்­அலி கைய­ளித்தார். இதனை ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ அறிந்த போது ரவூப் ஹக்கீம் மீது அவர் கடும் கோபத்தை வெளிப்­ப­டுத்­தினார்.

2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலின் போது ரவூப் ஹக்கீம் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு ஆத­ரவு வழங்க எண்­ணி­யி­ருந்தார். ஆனால் கட்­சியின் செய­லாளர் நாய­க­மாக இருந்த ஹஸன்­அலி அதனை எதிர்த்தார். எக்­கா­ரணம் கொண்டும் மஹிந்­த­வுக்கு ஆத­ரவு வழங்க முடி­யா­தென்று ஹஸன்­அலி தெரி­வித்தார். இதன் பின்­னர்தான் முஸ்லிம் காங்­கிரஸ் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்­கி­யது.

இவ்­வி­த­மாக மஹிந்­தவின் அர­சாங்­கத்தை எதிர்த்த ஹஸன்­அலி, தற்­போது மஹிந்­தவின் சகோ­தரர் கோத்­தா­ப­ய­வுக்கு ஆத­ரவு வழங்க தீர்­மானம் எடுத்­துள்ளார். அதா­வது முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு எதி­ரான அர­சி­ய­லையே அவர் தீர்­மா­னித்­துள்ளார்.

பசீர் சேகு­தாவூத் 2010ஆம் ஆண்டு மஹிந்­தவின் அர­சாங்­கத்தில் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ருக்கு தெரி­யா­ம­லேயே முழு அமைச்சர் பத­வியை பெற்றுக் கொண்­டவர். அந்­த­ள­வுக்கு அவ­ருக்கும், மஹிந்­த­வுக்கும் நெருக்கம் இருந்­தது. இப்­போதும் இருக்­கின்­றது. 2015ஆம் ஆண்டு முஸ்லிம் காங்­கிரஸ் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிப்­ப­தற்கு முடிவு செய்த போதிலும், பசீர் சேகு­தாவூத் மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவை ஆத­ரித்தார்.

இந்தப் பின்­ன­ணியில், ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தீர்­மானம் எடுத்­தி­ருந்தார். ஆயினும், ஹிஸ்­புல்லாஹ் போட்­டி­யி­டு­வாரா என்ற சந்­தேகம் முஸ்­லிம்­களின் வாக்­கு­களை பிரிக்க வேண்­டு­மென்று விரும்­பு­கின்­ற­வர்­க­ளி­டையே இருந்­தது. இதனால் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு பசீர் சேகுதாவூத் பணம் கட்­டினார். இந்­நி­லையில், ஹிஸ்­புல்லாஹ் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பசீர் சேகுதாவூத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தி­லி­ருந்து வாப­ஸானார். பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லுக்கு விடை கொடுத்து விட்டேன் என்று அறி­வித்த பசீர் சேகுதாவூத் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடிவு செய்­த­மையும், ஹிஸ்­புல்லாஹ் வேட்புமனுவை தாக்கல் செய்­ததன் பின்னர் தேர்­தலில் போட்­டி­யி­டாது ஒதுங்கிக் கொண்­ட­மையும் கோத்­த­ாபய ராஜ­ப­க் ஷவை வெல்ல வைப்­ப­தற்­காக எடுக்­கப்­பட்­ட­தொரு நட­வ­டிக்­கை­யாகும். இதற்கு மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் ஆசிர்­வாதம் இருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும், ஹிஸ்­புல்லாஹ் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடிவு செய்த போது, ஹஸன்­அலி, பசிர் சேகு தாவூத் ஆகி­யோர்­க­ளுடன் ஆலோ­ச­னை­களை மேற்­கொண்டார். இதன் பின்னர் ஹிஸ்­புல்லாஹ் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது வர­வேற்­கத்­தக்­கது. அவர் முஸ்லிம் சமூ­கத்­திற்­காக இந்த முடிவை எடுத்­துள்ளார் என்று ஊட­கங்­களில் அறிக்­கையை விடுத்தார் ஹஸன்­அலி.

இவ்­வாறு ஹிஸ்­புல்­லாஹ்வின் தீர்­மா­னத்தை ஆத­ரித்து பேசி­ய­தோடு, அதில் சமூகம் சார்ந்த விட­ய­முள்­ள­தென்று தெரி­வித்த ஹஸன்­அலி, தற்­போது ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு ஆத­ரவு வழங்­காது, கோத்­த­ாபய ராஜ­பக் ஷ­வுக்கு ஆத­ரவு வழங்க முன் வந்­துள்­ள­மையை முஸ்லிம் சமூ­கத்­திற்­காக என்று கூறி முழு சுயநலத்தை புதைத்து விட முடி­யாது. பசில் ராஜ­பக் ஷ­விடம் 13 அம்சக் கோரிக்­கை­களை முன் வைத்­தார்கள். அது பற்றி கோத்­தா­பய ராஜ­பக் ஷஷ எத­னையும் பேச­வில்லை. ஆனால், எங்­க­ளது கோரிக்­கை­களை ஏற்­றுள்­ளார்கள் என்று ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பின் உயர்­பீட உறுப்­பி­னர்கள் முக­நூலில் கதை கூறி கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

தற்­போது ஹிஸ்­புல்லாஹ் தான் வெல்லும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரல்ல. ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் வேட்­பாளர் என்றும், முஸ்­லிம்­களின் 02 இலட்­சத்து 50 ஆயிரம் வாக்­கு­களை இலக்கு வைத்து போட்­டி­யி­டு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். பௌத்த இன­வாதம் தலை­வி­ரித்­தாடும் நிலையில், முஸ்­லிம்கள் எனக்கு வாக்­க­ளிக்க வேண்­டு­மென்­பது கூட பௌத்த இன­வா­தி­க­ளுக்கு கையில் பொல்லைக் கொடுத்­த­தா­கவே இருக்­கின்­றது. இப்­போது அவர்கள் மௌன­மாக இருப்­பது தாங்கள் ஆத­ரிக்கும் வேட்­பாளர் வெற்றி பெற வேண்­டு­மென்­ப­தற்­காக என்­ப­தனை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் முடிந்­ததும் ஹிஸ்­புல்லாஹ் கொடுத்த பொல்­லையும் தூக்கிக் கொண்டு வரு­வார்கள் என்­பது முன்­னெச்­ச­ரிக்­கை­யாகும்.

, ஹிஸ்­புல்லாஹ் தனித்து போட்­டி­யி­டு­வ­திலும், ஏனைய முஸ்லிம் தலை­வர்கள் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கும், கோத்­த­பாய ராஜ­ப­க்ஷ­வுக்கும் ஆத­ரவு தெரி­வித்துக் கொண்­டி­ருப்­ப­திலும் எந்­த­வொரு சமூகம் சார்ந்த விட­யமும் கிடை­யாது. அவர்­களின் சுய அர­சி­ய­லையும், தங்­க­ளையும் பாது­காத்துக் கொள்­வ­தற்­கா­கவே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனால், எந்­த­வொரு முஸ்லிம் அர­சியல் தலை­வ­ரையும் சமூகத் தலை­வர்கள் என்று பட்டம் சூட்­ட­வேண்­டி­ய­தில்லை. எம்.சுமந்­திரன் கூறி­யது போன்று இரு­வரும் கெட்­ட­வர்­கள்தான். அதனால், முஸ்­லிம்கள் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களில் யார் வெற்றி பெற்றால் முஸ்­லிம்­க­ளுக்கு அடா­வ­டித்­த­னங்கள் குறை­யு­மென்று எதிர் பார்க்­கின்­றோமோ அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்டும். இல்­லாது சிந்­தித்து வாக்­க­ளிக்க வேண்டும். முஸ்­லிம்­களின் வாக்­குகள் எந்­த­வொரு வேளை­யிலும் பய­னற்­ற­தாக இருக்கக் கூடாது.

வெற்றி வாய்ப்­புள்­ள­வ­ருக்கு வாக்­க­ளித்தல்

இதே வேளை, முஸ்­லிம்கள் வெற்றி வாய்ப்­புள்­ள­வ­ருக்கு வாக்­க­ளிக்க வேண்­டு­மென்று முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளினால் பிர­சா­ரங்கள் செய்­யப்­ப­டு­கின்­றன. ஒரு சிலர் வெற்றி பெறும் வேட்­பாளர் என்­றில்­லாது முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை ஏற்றுக் கொள்ளும் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்க வேண்­டு­மென்றும் பிர­சாரம் செய்­கின்­றார்கள்.

முஸ்­லிம்கள் ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிப்­பது என்­பது இன்­றைய அர­சியல் சூழலை கருத்திற் கொண்­ட­தாக அமைய வேண்டும். முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை ஏற்றுக் கொள்ளும் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்க வேண்­டு­மென்­ப­தனை விடவும், முஸ்­லிம்­களை யார் அதிகம் ஏமாற்ற மாட்டார் என்று கணித்து வாக்­க­ளிக்க வேண்டும்.

சஹாப்தீன்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!