குழந்தைக்கு அளவுக்கதிகமாக இன்சுலின் கொடுத்து கொல்ல முயன்ற தாய்…!

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பெண் குழந்தைக்கு அளவுக்கதிகமாக இன்சுலின் கொடுத்து கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியுள்ளார்.சவுதியிலிருந்து வந்து, லண்டன் சிறுவர்கள் மருத்துவமனையில் தன் குழந்தையை அனுமதித்த Amal Asiri (29) என்ற பெண் மற்றும் அவரது கணவர் Mohammed Asiri (38) மீது, வேண்டுமென்றே தங்கள் குழந்தைக்கு அளவுக்கதிகமாக இன்சுலின் கொடுத்து கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

குழந்தையின் நிலையைக் கண்டு, மருத்துவர் ஒருவர் தற்செயலாக அவளது இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க, அது மிகக்குறைவாக இருந்தது தெரியவந்தது. குழந்தை அனுமதிக்கப்பட்ட அறையை சோதனையிடும்போது, இன்சுலின் போத்தல்களும், ஊசிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.ஒரு மோசமான நர்சின் உதவியுடன் அந்த குழந்தைக்கு அவளது பெற்றோர் அளவுக்கதிகமாக இன்சுலின் கொடுத்திருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்த அவர்கள் Old Bailey நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இருந்தனர்.இதற்கிடையில், விசாரணை முடிவில், குழந்தைக்கு அளவுக்கதிகமாக இன்சுலின் கொடுத்து கொல்ல முயன்றது Amal Asiriதான் என்றும், இந்த குற்றச் செயலுக்கும் அவரது கணவருக்கும் சம்பந்தமில்லை என்பது தெரியவந்தது.

ஆனால், தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நேரத்தில், சரியாக Amal Asiriயும் அவரது கணவரும் தலைமறைவாகிவிட்டார்கள்.சவுதி தூதரகத்தை அதிகாரிகள் தொடர்பு கொண்ட போது, அவர்கள் இருவரும் சவுதிக்கு செல்ல விமான பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது.ஆக, Amal Asiri இல்லாமலேயே வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று Amal Asiriக்கு, நீதிபதி Mark Lucraft QC நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.Amal Asiri தலைமறைவானது கவலைக்குரிய விடயம் என்பதோடு, அந்த குழந்தை எப்படி இருக்கிறாள், அவளது நிலை என்ன என்பது தெரியாதது மிகவும் கவலையை அளிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!