சிங்கள மக்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முனைகிறார் சுமந்திரன் – மகிந்த

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள மக்களை ஏமாற்றி தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஆட்சியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றார். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று, பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கலகெதரவில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

“ புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை ஒருதலைபட்சமானது.

புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஊடகங்களுக்கு சிங்கள மொழியில் ஒரு விதமாகவும், தமிழ் மொழியில் பிறிதொரு விதமாகவும் கருத்துரைத்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையில், சிங்கள மொழியில் ஒருமித்த நாடு என்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும் சமஷ்டி முறைமையினை தோற்றுவிப்பதற்கான வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு இனத்தினை ஏமாற்றும் செயற்பாடாகும்.

நாடு மீண்டும் பிளவுபடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது ” என்று அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!