அயோத்தி தீர்ப்பு-சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு…!

அயோத்தி வழக்கில், தொரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம் சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின், தீர்ப்பு நீதிபதிகள் வாசித்து வருகின்றனர்.

அதில், பாபர் மசூதி கட்டுவதற்கு முன் அந்த இடம் இஸ்லாமிய அமைப்பு படி இல்லை என்றும், அலகாபாத் நீதிமன்றம் நிலத்தை மூன்றாக பிரித்து வழங்கியது தவறு என்றும் தெரிவிக்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு, மசூதி அமைக்க 5ஏக்கர் நிலம் வக்பு வாரியம் கேட்கும் இடத்தில் வழங்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் 3மாதத்தில் கோவில் கட்டும் அமைப்பை தயாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதற்கான அறக்கட்டளை உருவாக்கி நிலத்தில் கோவில் கட்டும் பணிகள் தொடரலாம்சன்னி பிரிவினர், நிலத்தின் உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் 2.77 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். இந்து அமைப்பினர் அதில் கோவில் கட்டி கொள்ளலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!