கோதுமை மாவின் விலையை உயர்த்த முடியாது! நிதியமைச்சர் மங்கள சமரவீர…!!

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மையில்லை என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

நுகர்வோர் அதிகாரசபையின் அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.இது சட்டவிரோத நடவடிக்கை. கோதுமை மாவின் விலை 8.50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!