வடக்கு கல்வி அமைச்சரை விசாரணைக்கு அழைக்கும் ரிஐடி!

வடக்­குக் கல்வி அமைச்­சர் க. பர­மேஸ்­வ­ர­னுக்கு அழைப்பு வந்­துள்­ளது என்று தெரி­வித்து கல்வி அமைச்­சர் க. சர்­வேஸ்­வ­ர­னி­டம் அழைப்­பாணை ஒன்­றைக் கைய­ளித்­த­னர். அந்த அழைப்­பா­ணை­யில் யார் அழைப்­பது, என்ன கார­ணம் என்­பன போன்ற விட­யங்­கள் இல்லை. வடக்கு கல்வி அமைச்­சர் க.பர­மேஸ்­வ­ரன் என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. வடக்கு கல்வி அமைச்­சர் அந்த அழைப்­பாணை தொடர்­பில் பதில் கூட­வேண்­டி­ய­தில்லை என்று அவர்­க­ளுக்கு உறு­தி­யா­கப் பதி­லளித்­தார்.

இது தொடர்­பில் அமைச்­ச­ரு­டன் தொடர்பு கொண்டு கேட்­ட­ போது வடக்­கு ­மா­காண கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் அமைச்­சின் அலு­வ­ல­கத்­துக்கு நேற்று பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வின் உத்­தி­யோ­கத்­தர்­கள் என்று கூறி இரு­வர் வந்­தார்­கள். அவர்­கள் கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் அமைச்­சர் க.பர­மேஸ்­வ­ரனை எதிர்­வ­ரும் மாதம் 5ஆம் திகதி கொழும்பு பயங்­க­ர­வாத விசா­ர­ணைப் பிரி­வுக்கு விசா­ர­ணைக்கு வரு­மாறு கொழும்­பில் இருந்து அழைப்பு வந்­துள்­ளது என்று தெரி­வித்து அதற்­கான அழை்­பா­ணையை என்­னி­டம் தந்­தார்­கள்.

எவ­ரது ஒப்­ப­மும் அற்ற வெறு­மனே கைக­ளால் எழு­தப்­பட்டு யாரால் எழு­தப்­பட்­டது அல்­லது யாருக்கு எழு­தப்­பட்­ட­தென்ற எந்­த­வொரு தக­வ­லு­மற்­ற­தாக போட்­டோ­பி­ரதி எடுக்­கப்­பட்ட ஆவ­ண­மொன்றை அவர்­கள் கைய­ளித்­த­னர். மொட்­டைக் கடி­தப் பாணி­யில் அமைந்­தி­ருந்த குறித்த கடி­தத்தை நான் ஏற்க மறுத்­தேன். எதிர்­வ­ரும் ஜூன் 5ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்ட நிகழ்ச்சி நிர­லின் பிர­கா­ரம் எனக்கு அவ்­வாறு சமூ­க­ம­ளிக்க நேர­மில்லை என்­றும் தெரி­வித்­துள்­ளேன்.-என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!