தமிழ் மக்கள் பேரவையை முதன்மைப்படுத்தியிருந்தால்…

நிறுதிட்டமான உண்மை.முற்றுமுழுதாக சுயநலம் இருக்கின்ற இடத் தில் பொதுநலத்துக்கு அறவே இடமில்லை என்பது நிறுதிட்டமான உண்மை.

இந்த உண்மையை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் போக்கு சான்றுப்படுத்தும்.

தங்களின் சுயலாபத்துக்கே முன்னுரிமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை நினைத்துச் செயற்பட்டபோது, தமிழ் மக்களுக் கான அத்தனை உரிமைசார் விடயங்களும் செல்லுபடியற்றதாகிப் போயிற்று.

எனினும் இந்த உண்மையை தமிழ் மக்கள் முழுமையாக உணரவில்லை என்பதையும் இங்கு கூறித்தானாக வேண்டும்.

சர்வதேச போர்க்குற்ற விசாரணை மற்றும் தமிழர் தாயகத்தில் உள்ள படையினரின் ஆக் கிரமிப்பு, காணாமல்போனவர்களைக் கண்டறி தல், அரசியல்கைதிகளின் விடுதலை என எது வும் நடந்தேறாத வகையில் எங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து தன்னைப் பலவீனப்படுத்திக் கொண்டது.

இனிமேல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவு டனோ அன்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுடனோ பேசிக் கதைத்து எந்தத் தீர் மானத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பெறமுடியாதென்பது வெளிப்படையான உண்மை.

ஓர் இனத்தின் அரசியல் தலைமை என்பது முதலில் தனது நேர்மைத்தனத்தை உறுதிப்படுத்த வேண்டும். பணம் உள்ளிட்ட எந்தச் சலுகைகளுக்கும் விலைபோகாத மனத்திடம் இருக்க வேண்டும்.

எதிரியும் குறை சொல்லாத அளவுக்கு நேர்மை இருக்கும்போது தான் கொண்ட இலட் சியத்தை அடைய முடியும்.

எனினும் துரதிர்ஷ்டவசமாக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு தனது நேர்மைத்தனத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது.

இதன் விளைவுதான் இன்று அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலைமையை ஏற் படுத்தியுள்ளது எனலாம்.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க வேண்டும் எனக் கருதியிருந்தால், தமிழ் மக் களின் இயக்கமாக உருவாக்கப்பட்ட தமிழ் மக் கள் பேரவையை கூட்டமைப்பு ஆதரித்திருக்க வேண்டும்.

இனப்பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அரசுடன் பேசும்போது தமிழ் மக்கள் பேரவையைக் கூட்டி தங்களின் பிடியை வலுப்படுத்தியிருக்க முடியும்.

ஆனால் இதனைச் செய்வதற்கு கூட்டமைப் பின் தலைமை ஒருபோதும் தயாராக இருக்கவில்லை.
மாறாக தமிழ் மக்கள் பேரவை தமக்கு எதி ரான அமைப்பென்றே அவர்கள் கருதினர்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று பேசப் படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிங்கள பேரினவாதக் கட்சிகளைச் சுட்டிக் காட்டி அவர் கள் குழப்புவார்கள், அவர்கள் விடமாட்டார்கள் என்று பொய்யுரைத்துப் பொய்யுரைத்தே எங்களுக்கு எதுவும் தராமல் விட்ட ஆட்சியா ளர்களின் இராஜதந்திரம் கூட்டமைப்பிடம் இருந்திருந்தால், அவர்கள் தமிழ் மக்கள் பேரவையை இன்னும் பலப்படுத்தியிருப்பார்கள்.

என்ன செய்வது! தனி மனித ஆதிக்கம் மேலோங்கி கூட இருப்பவர்கள் கைகட்டி நிற்கும் நிலை வந்தால், இதுதான் நடக்கும் என்ப தற்கு ஈழத் தமிழர்கள்தான் மிகச்சிறந்த உதாரணமாவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!