சகல இனங்களுக்கிடையிலும் ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயற்படுவார் – ரிஷாத் நம்பிக்கை

புதிய ஜனா­தி­பதி சகல இனங்­க­ளுக்­கி­டை­யிலும் சமா­தானம், ஐக்­கியம், சகோத­ரத்­துவம், நம்­பிக்­கை­ மற்றும் பாதுகாப்­பு­ ஆ­கி­ய­ன ­நி­லை­கொள்ளும் வகையில் செயற்­படு­வா­ரெ­ன­ நம்­பு­கின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்­துள்ளார். ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக்ஷவுக்கு வாழ்த்துத் தெரி­வித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்கை ஜன­நா­ய­க­ சோ­ஷ­லி­ச கு­டி­ய­ரசின் நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாக நாட் டின் பெரும்­பான்­மை­ மக்­களின் ஆத­ர­வோடு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட கோத்­த­பாய ராஜ­பக்ஷ வுக்கு அகில இலங்­கை ­மக்கள் காங்­கி­ர­ஸி­னதும் என­து­ மக்­க­ளி­னதும் வாழ்த்­துக்­க­ளை­ தெ­ரி­வித்துக் கொள்­கிறேன்.

ஜனா­தி­ப­தி­ தேர்­தலில் புதிய ஜன­நா­ய­க­ முன்­ன­ணி ­வேட்­பாளர் சஜித்­ பி­ர­மே­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளித்து, வாக்­க­ளித்­த­ அ­னை­வ­ருக்கும் எனது விஷேட நன்­றி­க­ளை ­தெ­ரி­வித்துக் கொள்­கின்றேன்.

புதிய ஜனா­தி­பதி சகல இனங்­க­ளுக்­கி­டை­யிலும் சமா­தானம், ஐக்­கியம், சகோ­த­ரத்துவம், நம்­பிக்­கை­ மற்றும் பாது­காப்­பு­ ஆ­கி­ய­ன­ நி­லை­கொள்ளும் வகையில் செயற்ப­டு­வா­ரெ­ன­ நம்­பு­கின்றோம்.

நமது நாடென்­ற­ வ­கையில் இன ஐக்­கி­யத்­து­டனும் சகோதர மனப்பாங்குடனும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு நாட்டை அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்ல புதிய ஜனாதிபதிக்கு வலிமையும் மனோ தைரியமும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!