கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவகால உதவி செய்த இந்திய கடற்படை!

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒன்றான கமோர்டா தீவில் கமோர்டா என்ற உள்ளடங்கிய கிராமத்தில் கர்ப்பிணி ஒருவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டு உள்ளது. இதனை அறிந்து கார்தீப் இந்திய கடற்படை தளத்தில் உள்ள கப்பலில் இருந்து அதிவேக படகு ஒன்று உடனடியாக கிராம பகுதிக்கு சென்று அந்த பெண்ணை மீட்டது.

இதன்பின்பு அந்த படகிலேயே அவருக்கு பிரசவம் நடந்தது. குழந்தையும் பிறந்துள்ளது. இருவரும் நலமுடன் உள்ளனர். இதனை அடுத்து படகு தீவு பகுதிக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்த சமூக சுகாதார மையத்தில் இருவரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!