பொதுமக்களின் குடியிருப்புகள் மத்தியில் விழுந்து நொருங்கிய விமானம்- 27 பேர் பலி

கொங்கோவின் கோமா நகரில் உள்ள குடியிருப்புகள் மீது பயணிகள் விமானமொன்று விழுந்து நொருங்கியதில் 27ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

17 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த சிறிய ரக விமானமொன்று விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நிமிடத்தில் மக்கள் குடியிருப்புகள் மீது விழுந்து நொருங்கியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் மூன்று தடவைக்கு மேல் தலைகீழாக சுழன்றது அதிலிருந்து புகை வெளியாகியது என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானம் விழுந்ததும அந்த பகுதிக்கு நாங்கள் ஓடினோம் விமானவோட்டியை எங்களிற்கு தெரியும் அவரது பெயர்டைடெர் அவர் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அலறினார் ஆனால் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் எங்களால் அருகில் செல்ல முடியவில்லை என அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

விமானம் விழுந்து நொருங்கியதன் காரணமாக ஒரே வீட்டிலிருந்த ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானம் விழுந்து நொருங்கியதும் அந்த பகுதிக்கு நான் விரைந்தேன், அங்கிருந்தவர்களின் உதவியுடன் இருவரை காப்பாற்றினோம் ஆனால் ஏனையவர்களை காப்பாற்றுவதற்கு தீ ஆபத்தானதாக மாறிவிட்டது என விமானவோட்டியொருவர் தெரிவித்து

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!