திருகோணமலையில் இந்திய கடற்படைக் கப்பல்

இந்தியக் கடற்படைக் கப்பலான ‘நிரேக்க்ஷக்’ பயிற்சிப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

திருகோணமலை வந்துள்ள இந்திய கடற்படைக் கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் பிரசாந்த், சிறிலங்கா கடற்படையின் கிழக்கு தலைமையக கட்டளை அதிகாரி றியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்திய கடற்படைக் கப்பல் எதிர்வரும் டிசெம்பர் 3ஆம் நாள் வரை திருகோணமலையில் தரித்து நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் அதிபர் தேர்தல் நடைபெறும் போது சீனக் கடற்படைக் கப்பல் ஒன்று கொழும்பில் தரித்திருந்தது.

தேர்தல் முடிந்த பின்னர், கடந்த 119ஆம் நாள் அம்பாந்தோட்டைக்கு ரஷ்ய கடற்படைக் கப்பல் ஒன்று வந்தது.

தற்போது இந்திய கடற்படைக் கப்பல் திருகோணலைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!