மகனை வளர்க்க வசதியில்லாததால் தந்தை செய்த செயல்…?

சீனாவில் தனது மகனை வளர்ப்பதற்கு வசதியில்லாததால் அவனது தந்தை அவனை ஒரு பைக்குள் அடைத்து கைவிட்டுச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.வெளியாகியுள்ள CCTV கமெரா காட்சியில், கையில் பையுடன் வரும் ஒருவர் அதை ஓரிடத்தில் போட்டு விட்டு அங்கும் இங்கும் பார்த்துவிட்டு அங்கிருந்து செல்வதைக் கானமுடிகிறது.அவ்வழியே வந்த மற்றொருவர் அந்த பையைப் பார்க்கிறார், ஆனால் பொலிஸாருக்கு தகவல் சொல்வதற்கு பதிலாக வேறொரு கடைக்கு முன் அந்த பையை போட்டு விட்டு செல்கிறார் அந்த நபர்.அந்த மூன்று வயது பையன் எப்படியோ ஒருவழியாக பையைத் திறந்து வெளியே வந்து அழ ஆரம்பிக்கிறான்.

அவனது அழுகுரல் கேட்ட மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். பொலிஸார் வந்து அந்த பையை சோதனையிடும்போது, அதற்குள் ஒரு கடிதம் இருந்துள்ளது.அதில் அந்த பையன் திருமண உறவுக்கு வெளியில் பிறந்ததாகவும், தனக்கு உடல் நல பிரச்சினைகள் இருப்பதோடு வசதியும் இல்லாததால் அவனை கைவிட்டு செல்வதாகவும், இரக்க மனம் படைத்த யாராவது அவனை எடுத்து வளர்க்குமாறும் எழுதப்பட்டிருந்தது. அந்த பையனை மீட்ட பொலிஸார் அவனை அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

இப்படி வசதியில்லாததால் குழந்தைகளை கைவிட்டுச் செல்லும் பெற்றோரின் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.அந்த குழந்தையை கைவிட்டுச் சென்ற நபரின் பெயர் Mr Qu (53) என்று தெரியவந்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!