பொலிஸ் அதி­காரம் குறித்து மீள்­ப­ரி­சீ­லனை செய்­ய ­வேண்டும் – கெஹெ­லிய

அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்தில் காணப்­ப­டு­கின்ற பொலிஸ் அதி கா­ரங்கள் தொடர்­பாக மீள்பரி­சீ­லனை செய்­ய­வேண்டும் என்­பதே அர­சாங்­கத் தின் நிலைப்­பா­டாகும் என்று இராஜாங்க அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

மேலும் முக்­கி­ய­மான காணி­களை வைத்­துக்­கொண்டு ஏனைய காணிகள் தொடர்­பான அதி­கா­ரத்தை மாகாண சபை­க­ளுக்கு வழங்­கலாம் அதில் பாரிய பிரச்­சி­னைகள் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்­பிட் டார்.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் இந்­திய விஜ­யத்­தின்­போது அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை அர­சாங்கம் அமுல்­ப­டுத்­த­வேண்டும் என்று இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­ வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் இந்­திய ஊட கம் ஒன்­றுக்கு செவ்­வி­ய­ளித்த ஜனா­தி­பதி கோத்­த­பாய பொலிஸ் அதி­காரம் குறித்து சிந்­திக்­க­வேண்­டி­யுள்­ளது என்று குறிப்­பிட்­டி­ருந்தார். இது தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­ டு­கையில்,

அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­த­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் நாங்கள் இருக்­கின்றோம். 13 அவது திருத்தச் சட்டம் ஏற்­க­னவே அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அது ஏற்­க­னவே அமுலில் தான் உள்­ளது.

ஆனால் 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்­கு­வது தொடர்பில் சிக்கல் நில­வு­கின்­றது. இது தொடர்பில் ஆரம்­பத் தில் இருந்தே பிரச்­சினை உள்­ளது.

எனவே தான் பொலிஸ் அதி­காரம் தொடர்பில் மீள் பரி­சீ­லனை செய்­வது தொடர்­பாக ஆராய்ந்­து­வ­ரு­கின்றோம். அதனை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்­பது குறித்து பார்க்­கின்றோம். அதா­வது பொலிஸ் அதி­கா­ரத்தில் சில குறைந்­த­ள­வி­லான அதி­காரம் கொண்ட விட­யங்கள் குறித்து பரி­சீ­லிக்­கலாம். போக்­கு­வ­ரத்து விடயம் போன்­றன தொடர்­பாக பரி­சீ­லிக்­கலாம்.

ஆனால் முழு­மை­யான பொலிஸ் அதி­கா­ரத்தை வழங்­கு­வது சிக்­க­லுக்­கு­ரி­யது. உதா­ர­ண­மாக வட மாகா­ணத்­துக்கு பொலிஸ் அதி­கா­ரத்தை கொடுத்தால் மாகாண முத­ல­மைச்சர் பொலிஸ் ஆணை­யா­ளரை நிய­மி்ப்பார். இந்த சூழலில் மேல் மாகா­ணத்தில் தவறு செய்த ஒருவர் வட மாகா­ணத்­துக்கு சென்­று­விட்டால் மேல் மாகா­ணத்தில் உள்ள பொலிஸார் குறித்த சந்­தேக நபரை கைது செய்ய வட மாகா­ணத்­துக்கு செல்­ல­வேண்டும். ஆனால் வட மாகாண பொலிஸ் ஆணை­யா­ளரின் அனு­ம­தி­யின்றி மேல் மாகாண பொலி­ஸா­ரினால் சந்­தேக நபரை கைது செய்ய முடி­யாத நிலை ஏற்­படும்.

இலங்கை போன்ற நாட்­டுக்கு இந்த நிலை பொருத்­த­மா­காது. அத­னால்தான் பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கு­வது சிக்­க­லுக்­கு­ரி­யது என்று கூறு­கின்றோம்.

எனவே 13 ஆவது திருத்­தத்தில் உள்ள பொலிஸ் அதி­காரம் குறித்து மீள்பரிசீ லனை செய்யவேண்டும் என்பதே அரசாங் கத்தின் நிலைப்பாடாகும். இதேவேளை காணி அதிகாரம் குறித்து பேசப்படுகின்றது. முக்கியமான காணிகளை வைத்துக் கொண்டு ஏனைய காணிகள் தொடர்பான அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங் கலாம் என்று எண்ணுகின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!