“100 நாள் வேலைத்திட்டம் குறித்து தனிநபரை விமர்சிக்க முடியாது”

நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் குறித்து தனிநபரையோ அல்லது ஒரு கட்சியையோ விமர்சிப்பது முறையல்ல. மஹிந்த ஆட்சியின் போது காணப்பட்ட மோசமான சூழ்நிலைகள் தளர்த்தப்பட்டு ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

நேற்று கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நிலவிய சர்வாதிகார ஆட்சி முறையை முறியடித்த ஜனநாயகத்தை நிலை நாட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை களமிறக்கி தேர்தலில் வெற்றிபெற்று ஜனநாயகத்தை நிலைநாட்டினோம்.

மேலும் ஆட்சி மாற்றத்தை நோக்கிய நகர்வின் ஒருபகுதியே நூறு நாள் வேலைத்திட்டமாகும். எனவே அது தொடர்பில் தனியொரு நபரையோ குறித்த ஒரு கட்சியையோ விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் நாம் ஆட்சிக்கு வந்தபோது நாட்டின் பொருளாதாரம் பல்வேறு சிக்களுக்குள்ளாகியிருந்தது, ஆனால் தற்போது பொருளாதார நிலைமையானது வலுவானதொரு நிலையில் காணப்படுகின்றது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!