பிரிகேடியர் பிரியங்கவை குற்றவாளியாக அறிவித்த லண்டன் நீதிமன்றம்

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை குற்றவாளி என அறிவித்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், அவருக்கு தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2018 பெப்ரவரி 4ஆம் நாள், லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களை நோக்கி, கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போல சைகை மூலம் எச்சரித்திருந்தார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ.

அவருக்கு எதிராக வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.

1986ஆம் ஆண்டின் பொது ஒழுங்கு சட்டத்தின் பிரிவு 4A (1) மற்றும் (5) ஆகியவற்றை மீறி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ குற்றத்தைச் செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோலை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி, அவருக்கு 2000 பவுண்ட் தண்டப்பணத்தைச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அத்துடன்,வழக்கு செலவாக 1842.80 பவுண்டையும், பாதிக்கப்பட்டவருக்கு மேலதிகமாக 127 பவுண்டையும், இழப்பீடாக 450 பவுண்டையும் செலுத்த வேண்டும் என்றும் வெஸ்ட்மினிஸ்டர் நீதிபதி பணித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!