ஆஸ்திரேலிய காட்டுத்தீ – 2000-க்கும் மேலான கோலா கரடிகள் இறப்பு.!

கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால், சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட, சிறிய கரடி போன்ற வடிவம் கொண்ட வனவிலங்கு கோலா. கிழக்கு ஆஸ்திரேலியாவின் வனப்பகுதியில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோலாக்கள் வாழ்ந்து வந்த நிலையில், அப்பகுதியில் கடந்த மாதம் துவங்கி தற்போது வரை கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுதீயில் சிக்கி, 25 சதவீதத்திற்கும் மேலான கோலாக்கள் உயிர் இழந்திருப்பதாக சூழலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!