ரணில் தலைமையை ஏற்கவில்லை – சஜித் அணி போர்க்கொடி!

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகளை சஜித் பிரேமதாச தரப்பின் உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் கரியவாசம் முன்பு கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரா ரஞ்சித் மத்தும பண்டார, அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் சஜித் பிரேமதாசவை கட்சித் தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் மாற்ற வேண்டும் என்பதே கட்சிக்குள் இருப்பவர்களின் ஒருமித்த கருத்து என்று அவர் கூறினார்.

கடந்த பல வாரங்களாக கட்சிக்குள் இருந்த முரண்பாட்டை அடுத்து எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்ததுடன் புதிய எதிர்க்கட்சித் தலைவராகவும் ஐக்கிய தேசியக் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!