அமெரிக்காவில்…வியப்பில் ஆழ்ந்த மக்கள்..!

அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்களை பார்த்து மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.அமெரிக்காவின் நிவாடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரில் சில புறாக்கள் வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டன. அவற்றின் தலையில் வித்தியாசமாக ஏதோ இருந்தது.இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் புறாக்களின் அருகில் சென்று உற்று கவனித்தனர். அப்போது புறாக்களின் தலையில் சிறிய அளவிலான தொப்பிகள் இருப்பதை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.

அதனை தொடர்ந்து தொப்பியுடன் இருந்த புறாக்களை அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அவை உடனடியாக இணையத்தில் வைரலாகின.புறாக்கள் தொப்பிகளுடன் அழகாக காணப்பட்டாலும், இது அவற்றை துன்பப்படுத்தும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!