இலங்­கையின் சிக்­கல்கள்

ஜனா­தி­பதி கோத்­தா­பயவின் வர­லாறு மற்றும் அவ­ரது எண்­ணப்­பா­டுகள் எப்­ப­டி­யா­ன­தாக இருந்த போதிலும் தனக்­காக வாக்­க­ளித்த மற்றும் வாக்­க­ளிக்­காத என அனை­வ­ருக்­கு­மான ஜனா­தி­ப­தி­யாக தனது ஆட்­சிக்­கா­லத்தில் செயற்­பட வேண்­டி­யி­ருக்­கின்­றது.

தனக்கு வாக்­க­ளித்­த­வர்­களை மாத்­தி­ர­மன்றி வாக்­க­ளிக்­கா­த­வர்­களைக் கூட தனது மக்­க­ளாக கருதி செயற்­பட வேண்­டி­யி­ருக்­கின்­றது. ஜனா­தி­ப­தியின் வெற்­றிக்கு பங்­க­ளித்­த­வர்கள் சிங்­கள பௌத்த மக்­க­ளாவர். சிங்­கள பௌத்­தர்­களில் 25 வீத­மா­ன­வர்­களும் தமிழர் மற்றும் முஸ்­லிம்­களும் அவ­ருக்கு எதி­ரா­கவே வாக்­க­ளித்­தி­ருந்­தனர். எனினும் அவர் தனக்கு சாத­க­மாக வாக்­க­ளித்த சிங்­கள மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி தனக்கு எதி­ராக வாக்­க­ளித்த தமிழ், முஸ்லிம் இனத்­த­வ­ருக்கும் ஜனா­தி­ப­தி­யாவார்.

புதிய ஜனா­தி­பதி பாரிய வெற்­றி­யினைப் பெற்­றுக்­கொண்­டி­ருந்­தாலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் பங்­க­ளிப்­பினைப் பெற்­றுக்­கொள்­வதில் தோல்வி கண்­ட­தா­னது அவ­ரது வெற்­றியில் தனித்­து­வ­மா­னதும் வரை­ய­றுக்­கப்­பட்ட ஒன்­றா­கவும் கரு­தலாம். இலங்கை போன்ற பல்­லி­னங்கள் வாழ்­கின்ற நாடு ஒன்றில் இன மத பேதங்கள் இன்றி அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்ற ஒரு­வரே தலை­வ­ராக அமைய வேண்டும். இலங்கை இது­வரை காலமும் அது போன்ற தலை­வர்­களை உரு­வாக்­கவும் தவ­றி­யி­ருக்­கின்­றது. சிங்­கள வாக்­கு­களால் மாத்­திரம் தெரி­வான போதிலும் சிங்­கள பௌத்­த­ருக்கு மேல­தி­க­மாக தமிழ், முஸ்லிம் இனத்­த­வர்­க­ளி­னதும் நம்­பிக்­கை­யையும் அபி­மா­னத்­தையும் பெறு­கின்ற ஒரு தலை­வ­ராக இருக்க முடி­யு­மானால் மாத்­தி­ரமே அவர் வெற்­றி­க­ர­மான தலைவர் ஒரு­வ­ராக கரு­தப்­ப­ட­ மு­டியும்.
தேசிய ஒற்­றுமை என்­பது நாட்டின் அபி­வி­ருத்­தியில் மிக முக்­கி­ய­மாக செல்­வாக்குச் செலுத்தும் ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது. தேசிய ஒற்­று­மையை உரு­வாக்­கு­வ­தற்­கான நோக்­க­மி­ருப்பின் அதனை சிங்­கள பௌத்­தர்கள் மத்­தியில் பாரிய வர­வேற்பைப் பெற்­றுள்ள ஒரு­வரால் மாத்­தி­ரமே வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்ள முடியும். மாறாக சிங்­கள பௌத்­தர்­களால் மதிக்­கப்­ப­டாத ஒரு­வ­ரினால் இந்த செயற்­பாட்டை மேற்­கொள்­வது சாத்­தி­ய­மா­ன­தாக அமை­யாது. இந்த நிய­தி­யினை மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் தமிழ்க் கூட்­ட­மைப்பு தலை­வ­ரி­ட­மி­ருந்தே (சம்­பந்தன்) கற்­றுக்­கொண்டேன்.

ஜனா­தி­ப­தியின் எண்­ணப்­பாடு
ஜனா­தி­பதி பத­விப்­பி­ர­மா­ணத்­திற்­காக ருவன்­வெ­லி­சா­யவை தெரிவு செய்­த­தா­னது சிறு­பான்­மை­யி­ன­ருக்கு வழங்­கப்­பட்ட பாத­க­மான சைகை­யொன்­றாக குறிப்­பிட முடியும் என்ற போதிலும் வடக்கில் மாவீரர் தின நிகழ்­வு­க­ளுக்கு அங்­கீ­கா­ர­ம­ளித்­ததன் ஊடாக வடக்­கிற்கு வழங்­கி­யி­ருக்­கின்ற சாத­க­மா­ன­தொரு சைகை­யாகக் குறிப்­பி­டலாம். வடக்கின் பிர­பா­கரன் மாத்­தி­ர­மன்றி, தெற்கின் விஜே­வீ­ரவும் தீவி­ர­வாத தலை­வர்­க­ளா­கவே நோக்­கப்­பட வேண்டும். விஜே­வீர மற்றும் ஜே.வி.பி கல­வ­ரத்­தின்­போது உயிர் நீத்­த­வர்­களை நினைவு கூரு­வ­தற்கு

தெற்கில் தடைகள் இல்­லை­யெனில் பிர­பா­கரன் அல்­லது குறித்த கல­வ­ரத்தில் உயிர்­நீத்­த­வர்­களை நினை­வு ­கூரு­வ­தற்­காக வடக்குப் பகு­தியில் தடைகள் காணப்­பட முடி­யாது. தெற்கின் சிங்­கள கல­வ­ரக்­கா­ரர்­க­ளா­கட்டும் வடக்கின் தமிழ் கல­வ­ரக்­கா­ரர்­க­ளா­கட்டும் அவர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட கல­வ­ரங்­களை எந்­த­வி­தத்­திலும் அனு­ம­திக்க முடி­யாது என்­ப­துடன் குறித்த கல­வ­ரங்கள் முறி­ய­டிக்­கப்­பட்­டதன் பின்னர் கல­வ­ரத்தில் ஈடு­பட்டு உயிர்­நீத்­த­வர்கள் நெறி­பி­றழ்ந்­து­விட்­டாலும் இந்த நாட்டின் குடி­மக்­க­ளா­கவே கரு­தப்­படல் வேண்டும். விஜே­வீர மற்றும் பிர­பா­கரன் என்­ப­வர்கள் பெரும்­பாலும் அர­சியல் கார­ணங்­க­ளுக்­கா­கவே நினை­வு­கூ­ரப்­ப­டு­கின்­றனர் என்ற போதிலும், கல­வ­ரங்­களில் உயி­ரி­ழந்­த­வர்­களின் தாய்,தந்­தையர்கள் மற்றும் சகோ­த­ரர்­களால் அவர்­க­ளது அன்புக்குரி­ய­வர்­களின் பிரிவு குறித்தே நினை­வு­கூ­ரப்­ப­டு­கின்­றதே தவிர, அதில் அர­சியல் கார­ணங்கள் காணப்­ப­டு­வ­தில்லை.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷ
2005 முதல் 2015 வரை­யான பத்­தாண்­டுகள் இந்த நாட்டை ஆட்­சி­செய்த மஹிந்த ராஜபக் ஷவின் சகோ­தரர் என்ற போதிலும், புதிய ஜனா­தி­பதி அந்த அடை­யா­ளத்­தி­லி­ருந்து தன்னை ஒதுக்கிக் கொள்ள முயற்­சிப்­பது அண்­மைக்­கால அவ­ரது நட­வ­டிக்­கைகள் ஊடாக அவ­தா­னிக்க முடி­கின்­றது. ராஜபக் ஷ குடும்­பத்தின் அடை­யா­ள­மாக அணி­யப்­பட்டு வரு­கின்ற சிவப்பு நிற சால்­வையை புதிய ஜனா­தி­பதி அணி­ய­வில்லை. தனக்கு பழக்­க­மான அரைக்கை சட்­டையும் நீள­காற்­சட்­டை­யை­யுமே உத்­தி­யோ­க­பூர்வ உடை­யாக பயன்­ப­டுத்­து­கின்றார். அண்­மையில் இந்­தி­யா­வுக்கு மேற்­கொள்­ளப்­பட்ட உத்­தி­யோ­க­பூர்வ பய­ணத்தின் போது கூட அந்த உடையில் மாற்றம் ஏற்­ப­டுத்­த­வில்லை. ஜனா­தி­பதி மாளி­கையைப் பயன்­ப­டுத்­தாமை, பாது­காப்பு வாக­னங்­களின் எண்­ணிக்கை இரண்­டாகக் குறைத்தல், ஜனா­தி­பதி செய­லாளர் காரி­யா­ல­யத்தின் ஊழியர் தொகை குறைப்பு, தனது புகைப்­ப­டங்­களை அரச நிறு­வ­னங்­களில் காட்­சிப்­ப­டுத்த தடை விதித்தல், அரச கூட்­டுத்­தா­ப­னங்கள் மற்றும் அரச வாணிப நிலை­யங்­க­ளுக்­கான பணிப்­பா­ளர்­க­ளாக அர­சியல் அல்­லக்­கைகள் நிய­மிக்­கப்­ப­டு­கின்ற நடை­மு­றையை மாற்றி, தகை­மை­யு­டை­ய­வர்கள் நிய­மிக்­கப்­படும் முறை ஒன்­றினை உரு­வாக்­கி­யமை ஆகி­யன மதிக்­கப்­பட வேண்­டி­யதும் பாராட்­டப்­ப­ட­வேண்­டி­ய­து­மான விட­யங்­க­ளாகும்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நாட்டின் சட்­டத்­துக்கு முர­ணாக அர­சாங்­கத்­துடன் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது பாரா­ளு­மன்றம் பாதிக்­கப்­ப­டு­வ­தற்­கான மிக முக்­கி­ய­மான கார­ண­மாக காணப்­ப­டு­கின்­றது. இது முக்­கி­ய­மா­கவே தடுக்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும். அது போன்று அமைச்­சர்­க­ளுக்கு அவர்­களின் அமைச்­சுக்­கு­ரிய பணி­களை மேற்­கொள்­வ­தற்­காக அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­ப­டு­கின்ற காரி­யாலய அலு­வ­லர்­க­ளுக்கு மேல­தி­க­மாக அமைச்­சர்­க­ளி­னாலும் பிரத்­தி­யே­க­மாக அலு­வ­லர்­களை நிய­மித்துக் கொள்­வது தொடர்­பான உரி­மையும் நீக்­கப்­ப­ட­வேண்­டிய ஒன்­றாகும். அது­போன்ற நட­வ­டிக்­கைகளை உலக நாடு­களில் காண­மு­டி­வ­தில்லை என்­ப­துடன், அமைச்­சர்கள் தமது குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு தொழில் மற்றும் நலன்­களை பெற்­றுக்­கொ­டுக்­கின்ற இந்த மோசமான செயற்­பா­டுகள் தொடர்பில் நாடு பாரிய ஒரு செல­வினை பொறுப்­பேற்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. அத்­துடன் சொத்­துக்கள், பொறுப்­புக்கள் தொடர்­பான சட்­டமும் அமுல்­ப­டுத்­தப்­படல் வேண்டும். வேண்­டு­மென்றே உண்­மையை மறைக்­கின்ற அடிப்­ப­டையில் சொத்­துக்கள், பொறுப்­புக்கள் தொடர்­பான தகவல் வழங்­காமல் இருப்­ப­வர்­க­ளுக்­கான தண்­ட­னை­யாக ஒரு மில்­லியன் ரூபா அப­ரா­தமும் ஒரு வருட சிறைத் தண்­ட­னையும் விதிக்­கப்­பட வேண்டும்.

கட்­டாக்­காலி நாய்கள்
விகா­ர­ம­கா­தேவி பூங்­கா­வி­லி­ருந்து நாய்கள் காணாமல் போயுள்­ள­தாக குறிப்­பிடும் பதி­வொன்றும் கட்­டாக்­காலி நாய்­களைப் பாது­காத்தல் தொடர்­பான கருத்­துக்கள் பலவும் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் கடந்த சில நாட்­க­ளாக காணக்­கி­டைத்­தன. கட்­டாக்­காலி நாய்கள் தொடர்­பான பிரச்­சி­னையும் இலங்­கையின் தீர்க்­கப்­ப­ட­வேண்டி பிரச்­சி­னை­களில் ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது.

இலங்­கையில் இருக்­கின்ற நாய்­களின் தொகை 25 இலட்சம் என்­ப­தாக கணிக்­கப்­பட்­டுள்­ள­துடன், அவற்றில் 30 வீத­மா­னவை உரி­மை­யா­ளர்கள் இல்­லாத கட்­டாக்­காலி நாய்­க­ளாகும். அந்த வகையில் கட்­டாக்­காலி நாய்­களின் தொகை 750,000 இருக்­கலாம் என்­ப­தாக கரு­தப்­ப­டு­கின்­றது. சுகா­தார அமைச்சின் வைத்­தியர் திலக் ஜய­வர்­தன 2017 ஆம் ஆண்டு முன்­வைக்­கப்­பட்ட அவ­சர விபத்­துக்கள் தொடர்­பான மதிப்­பீட்­ட­றிக்­கைக்கு அமைய இலங்­கையில் இடம்­பெற்­றி­ருக்கும் விபத்­துக்­களில் அதி­க­மா­னவை விலங்­குகள் கடித்தல் ஊடாக இடம்­பெற்­ற­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ரு­கின்­றது. அது இலங்­கையில் இடம்­பெற்ற மொத்த விபத்­துக்­களில் 33.1 வீத­மாகும். ஆனால், அந்த ஆண்டில் விலங்கு கடி­யினால் ஏற்­பட்ட விபத்­துக்­களின் வீதத்­திலும் பார்க்க குறைந்த அள­வி­லேயே வீதி விபத்­துக்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. குறித்த ஆண்டின் வீதி விபத்­துக்­களின் வீதம் 15.9 ஆகும். நாய்க்­கடி கார­ண­மாக ஆண்­டொன்­றுக்கு சிகிச்சை பெறு­வோரின் தொகை 300,000 ஆகும். நீர்­வெ­றுப்பு நோய்க்­காக இலங்­கையில் செல­வி­டப்­படும் தொகை 592 மில்­லியன் ரூபா­வாகும்.

விவ­சா­யமும் வன விலங்­கு­களும்
கட்­டாக்­காலி நாய்கள் மாத்­தி­ர­ மன்றி, விவ­சா­யத்­துக்கு கேடு விளை­விக்­கின்ற குரங்­குகள், மர­அணில்கள், பன்­றிகள், முள்­ளம்­பன்­றிகள், மயில்கள் போன்ற விலங்­குகள் தொடர்­பா­கவும் கடு­மை­யான கொள்­கைகள் பின்­பற்­றப்­பட வேண்டும் என்­பது எனது கருத்­தாகும். அர­சாங்­கத்தின் மதிப்­பீ­டு­க­ளுக்கு அமைய வன­வி­லங்­குகள் சேதப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற விவ­சாய உற்­பத்­தி­களின் தொகை மொத்த விவ­சாய உற்­பத்­தியில் 30 வீத­மாகும். அதன் பெறு­மதி அண்­ண­ள­வாக 350 பில்­லி­யன்கள் என்­ப­தாக மதிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. அதா­வது 350,000 மில்­லியன் ரூபா­விற்கு சம­மா­ன­தாக காணப்­ப­டு­கின்­றது.

வன விலங்­கு­களால் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற அழி­வு­க­ளா­னது விவ­சா­யிகள் விவ­சா­யங்­களில் ஈடு­ப­டு­வ­தற்­கான ஆர்­வத்­தினை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்கு கார­ண­மாக அமை­கின்­றன என்­ப­துடன், அவர்­களால் ஈட்­டப்­படக் கூடிய வரு­மா­னத்தின் அளவு பாரியளவில் குறை­வ­தற்கும் கார­ண­மாக அமை­கின்­றது. வன­வி­லங்­குகள் மூல­மாக விவ­சா­யத்­திற்கு ஏற்­ப­டு­கின்ற பாதிப்­புக்­களை குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வதன் ஊடாக கிரா­மிய பகுதி மக்­களின் விவ­சாய வரு­மா­னங்­களில் பாரிய அதி­க­ரிப்­பினை ஏற்­ப­டுத்த முடியும் என்­பதன் மூலம் விவ­சாய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதில் காணப்­ப­டு­கின்ற பொடு­போக்­கான தன்மை அகன்று விவ­சா­யத்தில் ஈடு­ப­டு­வ­தற்­கான ஆர்வம் அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் ஏற்­ப­டு­வ­தற்கும் கார­ண­மாக அமையும்.

வீட்டுத் தோட்டச் செய்­கையில் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத பாரிய அழி­வு­களை குரங்­குகள் ஏற்­ப­டுத்­து­கின்­றன. வீட்டுத் தோட்­டங்­களின் தென்னை மற்றும் பழச் செய்­கைக­ளுக்கு அவை மூல­மாக பாரிய கேடுகள் விளை­விக்­கப்­ப­டு­கின்­றன. குரங்­கு­களின் தொகையில் 80 வீத­மான அளவைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட முடி­யு­மாயின் அது வீட்டுத் தோட்டப் பயிர்ச்­செய்­கையில் பாரி­ய­தொரு அபி­வி­ருத்தி ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமையும் என்­ப­துடன், வீட்டுச் செய்­கையின் ஊடாக பெறப்­ப­டு­கின்ற வரு­மா­னத்தின் அளவு இரு­ம­டங்­காக அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்­பி­னையும் ஏற்­ப­டுத்தும். பன்­றிகள், மயில்கள், முள்­ளம்­பன்­றிகள் என்­ப­வற்றை வேட்­டை­யா­டு­வ­தற்­கான அனு­ம­தி­யி­னையும் அவற்றின் இறைச்­சி­களைத் தன்­வசம் வைத்­தி­ருப்­ப­தற்கும் அவற்றை விற்­பனை செய்­வ­தற்­கு­மான அனு­மதி விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தா­னது வன­வி­லங்­கு­களில் ஏற்­பட்­டி­ருக்­கின்ற பாரிய அதி­க­ரிப்­பினை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு கார­ண­மாக அமையும். வனாந்­தரப் பகு­தி­களில் வேட்­டை­யாடல் நட­வ­டிக்­கைளில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு கிராமப் பகு­தி­க­ளிலும் வேட்­டை­யா­டு­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­ப­டு­வதன் ஊடாக அவர்­க­ளுக்கு ஒரு வாழ்­வா­தா­ர­மாக அமை­வ­தற்கு கார­ண­மாக அமையும்.

பால் மற்றும் இறைச்சி
இலங்கை பால் உற்­பத்­தி­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­காக வரு­டாந்தம் செல­வ­ழிக்­கின்ற தொகை 400 மில்­லியன் டொலர்­க­ளாகும். ஆனாலும் இலங்­கைக்கு தேவை­யான பால் உற்­பத்­தி­யினை இலங்­கை­யி­லேயே உற்­பத்தி செய்­து­கொள்ளும் வாய்ப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. அதன் ஊடாக பால் உற்­பத்­திக்­காக செல­விடும் தொகை­யினை மீதப்­ப­டுத்­திக்­கொள்­ளலாம். இலங்­கையில் இந்த நட­வ­டிக்­கை­யினை மேற்­கொள்­வ­தற்கு தடை­யாக இருப்­பது போதிய அளவு புற்­த­ரைகள் இல்­லா­ம­லி­ருப்­ப­தல்ல. மாறாக கலா­சார மற்றும் மதம் தொடர்­பான கொள்­கை­களே இதற்கு தடை­யாக காணப்­ப­டு­கின்­றன. பால் உற்­பத்­திக்­காக மாத்­திரம் பண்­ணை­களை நடத்திச் செல்­வது சாத்­தி­ய­மான­தொரு விட­ய­மல்ல. பால் உற்­பத்­திக்கு மேல­தி­க­மாக இறைச்சி உற்­பத்­தி­யையும் நோக்­காகக் கொண்டு மாடுகள் வளர்க்­கப்­படல் ஊடாக மாத்­தி­ரமே பொரு­ளா­தார ரீதியில் சாத­க­மான பிர­தி­ப­லன்­களை ஏற்­ப­டுத்த முடியும். எனினும் இறைச்­சிக்­காக மாடுகள் கொல்­லப்­ப­டு­வது பாவ­கா­ரி­ய­மாக இலங்­கையில் நோக்­கப்­ப­டு­கின்­றது.
பௌத்த நாடு­களில் தனி நபர் இறைச்சி நுகர்வின் அளவு இலங்­கையை விட அதி­க­மாகக் காணப்­ப­டு ­கின்­றது. திபெத், மொங்­கோ­லியா போன்ற நாடு­களில் பௌத்­தர்கள் மாத்­தி­ர­மன்றி பிக்­குகள் கூட இறைச்­சியை உண்­ணு­ப­வர்­க­ளாக இருக்­கின்­றனர். தென் ஆசிய நாடு­களில் இறைச்சி நுகர்வு கூடிய நாடாக பூட்டான் காணப்­ப­டு­கின்­றது.

விவ­சாயப் புரட்சி ஒன்றின் அவ­சியம்
ஓரி­டத்தில் தேங்­கிய அமைப்பில் இருக்­கின்ற சாதா­ரண விவ­சா­யிகள் வச­மி­ருக்­கின்ற கிரா­மிய விவ­சா­யங்­க­ளுக்கும் பாரிய கம்­ப­னிகள் வச­மி­ருக்­கின்ற வாணிப விவ­சா­யங்­க­ளுக்கும் புரட்­சி­க­ர­மான மாற்றம் ஒன்றின் தேவை காணப்­ப­டு­கின்­றது எனலாம். இந்த இரண்டு துறை­க­ளிலும் பாரிய வரு­மானம் ஒன்­றினை ஈட்­டிக்­கொள்ளும் அமைப்­பி­லான மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தா­னது இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தில் குறிப்­பி­டத்­தக்க முன்­னேற்றம் ஏற்­பட கார­ண­மாக அமையும்.

கிரா­மிய விவ­சா­யத்­து­றை­யினை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக அந்த துறைக்­காக வன விலங்­கு­களால் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற கேடு­க­ளி­லி­ருந்து அந்த துறை பாது­காத்­துக்­கொ­டுக்­கப்­படல் வேண்டும். அத்­துடன் முயற்­சிக்கு ஏற்ற அடிப்­ப­டை­யி­லான வரு­மா­னங்­களை ஈட்­டிக்­கொள்ளும் அடிப்­ப­டை­யி­லான பயிர்ச்­செய்­கை­களில் அவர்கள் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். நெல் உற்­பத்­திக்­காக வழங்­கப்­பட்­டி­ருக்­கின்ற முன்­னு­ரிமை இல்­லா­ம­லாக்­கப்­ப­ட­வேண்டும்.

நெல் பயிர்ச்­செய்கை மூல­மாக ஈட்ட முடி­யு­மான வரு­மானம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக காணப்­ப­டு­கின்­றது. அதிஷ்­ட­மி­ருக்­கு­மாயின் ஒரு ஏக்கர் வயல் நில­மொன்­றி­லி­ருந்து ரூ.40,000 வரு­மா­ன­மாக பெற்­றுக்­கொள்­ளலாம். இலங்­கையின் காணி­களில் பாரியளவு (933,000 ஹெக்­டெ­யர்கள்) நெல் பயிர்ச்­செய்­கைக்­காக ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஈர வல­யத்தில் அதிக வயல் காணி­களில் நெல் பயி­ரி­டப்­ப­டு­வ­தில்லை. அந்தக் காணி­களில் வேறு எந்­த­வி­த­மான பயிர்ச்­செய்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­து­மில்லை. நெல் பயிர்ச்­செய்­கைக்­காக 19 நாட்­க­ளுக்கு மாத்­தி­ரமே மனித உழைப்பு தேவைப்­ப­டு­கின்­றது. மூன்று மாதங்­க­ளுக்கும் அதி­க­மான காலத்தில் 19 நாட்கள் மாத்­தி­ரமே வேலையில் ஈடு­ப­டு­கின்ற விவ­சா­யி­க­ளுக்கு எவ்­வாறு செல்­வந்­தர்­க­ளாக மாற முடியும்? அடுத்து மூன்று வேளை­க­ளுக்கும் சோறு உண்­ணு­வதைப் பழக்­கப்­ப­டுத்­திக்­கொண்ட மக்­களால் எவ்­வாறு ஆரோக்­கி­ய­மா­ன­வர்­க­ளாக வாழ­மு­டியும்? இலங்கையில் சோறு உண்ணும் அளவினைக் குறைத்து இறைச்சி, மரக்கறி, பழவகைகளை அதிகமாக உட்கொள்கின்ற அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். அதன் ஊடாக காணிகளை பிரயோசனப்படுத்திக் கொள்ளும் முறைகளிலும் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்கின்ற முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி விவசாயத்தின் ஊடாக ஈட்டிக்கொள்கின்ற வருமானத்திலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.
அப்போது நாட்டுக்கு தேவையான அரிசி உற்பத்தியினை உலர் வலயத்திலேயே உற்பத்தி செய்துகொள்ள முடியுமான நிலை ஏற்படும். எனவே, ஈர வலயத்தில் நெல் உற்பத்திக்கு பயன்படுத்தாத இடங்களை அதனது சரிவான அமைப்பில் மாற்றம் ஏற்படாத அடிப்படையில் வேறு பயிர்ச் செய்கைகளுக்காக அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும். அந்த வயல் நிலங்களில் இறால் பண்ணைகளை அமைக்கலாம். இறால் உணவை நாங்கள் உட்கொள்ளாவிடின் அதனை ஏற்றுமதிக்காக பயன்படுத்தலாம். மேலும் அந்த வயல் நிலங்களை வெளிநாடுகளுக்காக வாத்துக்களை உற்பத்தி செய்யும் பண்ணைகளாக மாற்றியமைக்கலாம்.

வாகனங்களுக்காக பயன்படுத்தும் எரிபொருளுடன் அல்கஹோல் 15 வீதத்தினை கலந்து பயன்படுத்தலாம் என்பதை இலங்கை கவனத்தில்கொள்ள வேண்டும். பிரேஸில், ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா ஆகிய நாடுகள் இவ்வாறாக கலந்து உற்பத்திசெய்யப்பட்ட எரிபொருளினைப் பயன்படுத் துகின்றன. இலங்கை வருடாந்தம் 5,000 மில்லியன் டொலருக்கு கிட்டிய தொகையினை எரிபொருளுக்காக செலவிடுகின்றது. இலங்கையில் கசிப்பு உற்பத்தி செய்கின்றவர்கள் ஊடாக எரிபொருளுடன் கலப்பதற்கு தேவையான சுத்தமான கசிப்பினை உற்பத்தி செய்துகொள்ள முடியுமாயின் 750 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இலங்கையில் மீதப்படுத்தலாம். இதனை கிராமிய மக்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய வழிமுறை ஒன்றாக மாற்றியமைக்கலாம். இவை இலங்கையின் வருமானத்தினை அதிகரிப்பதற்கான புரட்சிகரமான மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்கான யோசனைகளாகும்.

– விக்டர் ஐவன்
– தமிழில் ராஃபி சரிப்தீன்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!