மெக்ஸிகோவில் இரு சொகுசு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

மெக்ஸிகோவில் இரு சொகுசுக் கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். கோஸூமல் என்ற தீவில் கார்னிவரல் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இரு கப்பல்கள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

இதில் கார்னிவல் குளோரி என்ற கப்பல் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டபோது, கார்னிவல் லெஜன்ட் என்ற மற்றொரு கப்பலின் மூக்குப் பகுதியில் உரசியதில் இரண்டும் விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் குளோரி கப்பலின் பின்பக்கம் சேதமடைந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!