எம்சிசி, சோபா, அக்சா உடன்பாடுகளை ரத்துச் செய்வதற்கு சஜித் ஆதரவு

தற்போதைய அரசாங்கத்துக்கு சிறிலங்கா மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கு அமைய, எம்சிசி, அக்சா, சோபா உள்ளிட்ட எல்லா அனைத்துலக உடன்பாடுகளும், நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிரிலவல என்ற இடத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ எம்சிசி, அக்சா, சோபா உடன்பாடுகளை ரத்துச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்தால், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில், எனது கட்சியின் ஆதரவை வழங்குவேன்.

எம்.சி.சி உள்ளிட்ட இந்த உடன்பாடுகளை இல்லாமல் ஒழிப்போம் என்று இப்போது அரசாங்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். அதற்கு நாட்டு மக்கள் ஆணையை வழங்கியிருந்தனர்.

எனவே அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், அத்தகைய நடவடிக்கைக்கு நாங்கள் ஆதரவளிப்போம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!