எம்.பிக்களைக் கைது செய்வதற்கா அரசு ஆணை பெற்றது?- சரத் பொன்சேகா

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான மக்களை ஆணையை, அதிபர் தேர்தலில் அரசாங்கம் பெற்றிருக்கிறதா என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை வெலிக்கடைச் சிறையில் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

”சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டிருப்பது நாட்டின் ஆட்சியாளர்கள் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் அவர்கள் மேற்கொண்ட பழிவாங்கும் வேட்டையை, மீண்டும் தொடங்கியிருப்பதற்கான அறிகுறியை வெளிப்படுத்தியிருக்கிறது.

ரணவக்கவை கைது செய்வதை விட, அரசாங்கம் சிந்திக்க வேண்டிய வேறு பல பிரச்சினைகள் உள்ளன.

உண்மையான பிரச்சினை என்னவென்றால், முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்துடன், மோதி விபத்தில் சிக்கிய உந்துருளி ஓட்டுநர், 1,000 சிசி உந்துருளியை ஓட்டிச் சென்றார், இது சிறிலங்காவில் தடைசெய்யப்பட்டது.

அவரே வேகமாக வந்து சம்பிக்க ரணவக்கவின் வாகனத்துடன் மோதினார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!