கோத்தா அரசு சர்வதேசத்துக்கு அடி பணியாது!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் எந்தவொரு சர்வதேச நாட்டுக்கும் டிபணியப் போவதில்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கடந்த கால அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு அடிப்பணிந்து செயற்பட்டதுடன், சர்வதேச சக்திகளிடம் மண்டியிட்டும் கிடந்தது.

நாம் வெற்றி பெற்றமை மாத்திரமல்ல இந்த தேர்தல் வெற்றியானது முழு நாட்டையும் வெற்றிகொள்ள வைத்துள்ளது. அதல பாதாளத்துக்குச் செல்லவிருந்த நாட்டைக் காப்பாற்றியுள்ளமை மாத்திரமல்ல பாதுகாப்பற்றிருந்த நாட்டை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளோம். அத்துடன் பௌத்த சாசனத்தை பாதுகாக்கும் நாடாகவும் மாற்றியுள்ளோம்.

இந்த அனைத்தையும் மக்கள்தான் ஏற்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தோல்வியடைந்திருந்தால் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும்?.

கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் சிறந்த ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறுகின்றன. என்றாலும், நாம் சர்வதேசத்துக்கு அடிபணிந்து செயற்படமாட்டோம். சர்வதேச சக்திகளுக்கும் பன்னாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் கோத்தாபயவின் அரசாங்கம் ஒருபோதும் அடி பணியாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!