ஐ.தே.கவுடன் கூட்டணி அமைக்க சுதந்திர கட்சி நினைக்கவில்லை : அமரவீர

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்தவர்களில் சிலர் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையே பலவீனப்படுத்தும் கருத்துக்களை கூறுகின்றனர். ஆனால் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலவீனப்படுத்த ஜனாதிபதியும் -பிரதமரும் முயற்சிக்கக்கூடாது என கேட்டுக்கொள்வதாக கூறும் அமைச்சர் மஹிந்த அமரவீர எக்காரணம் கொண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து தாம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் பொதுக்கூட்டணி அமைப்பது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் இந்த காரணங்கள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கடந்த காலங்களில் நாட்டின் தேசிய பாதுகாப்பு மீதான அச்சம் நிலவிய பிரதான காரணத்தினால் கட்சியை விட நாடு முக்கியம் என்ற கொள்கையில் நாம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து ஜனாதிபதி ஷ கோத்தாபய ராஜபக் விற்காக செயற்பட்டோம்.

இன்று நாடு பாதுகாப்பாக உள்ளது. எனினும் பொதுக் கூட்டணி குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அதிக கவனம் செலுத்தி வருகின்றது. குறிப்பாக பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுன் இணைந்து பொதுக் கூட்டணியை அமைக்கும் என்ற வாக்குறுதியை ஜனாதிபதியும் பிரதமரும் வழங்கியுள்ளனர்.

அதனை அவர்கள் மீறக்கூடாது என்பதே எமது கோரிக்கையாகும். அவர்கள் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!