பாதையோர கடையில் வாங்கிய கடிகாரம்….ஜேர்மானியருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

பாதையோர கடை ஒன்றில் கடிகாரம் ஒன்றை வாங்கிய ஜேர்மானியர் ஒருவர், தற்செயலாக அந்த கடிகாரத்தில் மறைந்திருந்த அறை ஒன்றில் பணக்கட்டு ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.Aurichஇல் வாழும் அந்த நபர் அந்த பணத்தை எண்ணிப்பார்த்தபோது, அதில் 50,000 Deutschmarks இருந்துள்ளது.

அதாவது அது 2001ஆம் ஆண்டு வரை புழக்கத்திலிருந்த பணம். உடனே, தனக்கு பணம் கிடைத்ததை உள்ளூரிலுள்ள காணாமல் போனவற்றை கண்டுபிடித்தால் ஒப்படைக்கும் அலுவலகத்துக்கு தெரியப்படுத்தி அந்த பணத்தை ஒப்படைத்துள்ளார் அவர்.

ஆனால், அந்த பணத்தை யாரும் உரிமை கோராததால் அவரிடமே அந்த பணத்தை ஒப்படைத்தது அலுவலகம். ஜேர்மனியைப் பொருத்தவரை எந்த காலத்து பணமானாலும் அதை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.

அதன்படி அவர் அந்த பணத்தை வங்கியில் ஒப்படைக்க, ஒரு யூரோவுக்கு பதிலாக 1.95583 Marks என்று கணக்கிட்டு 25,500 யூரோக்களை அவருக்கு வழங்கியது வங்கி. நிர்வாக கட்டணமாக 576 யூரோக்கள் Aurich நகரத்துக்கு செலுத்திவிட்டு மீதிப்பணம் அவருக்கு கொடுக்கப்பட்டது.

ஜேர்மனியில் இப்படி பணத்தை ரகசியமாக மறைத்துவைப்பது காலம் காலமாக உள்ள வழக்கமாகும்.அதனால் இப்படி பழைய பொருட்கள் வாங்கும் பலருக்கும் இதற்கு முன் இதேபோல் அதிர்ஷ்டம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!