4.8 பில்லியன் டொலரை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா

2020 ஆண்டில் சிறிலங்கா அரசாங்கம் 4.8 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக, சிறிலங்கா மத்திய வங்கியினி் மூத்த பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மத்திய வங்கியில் கடந்த 27ஆம் நாள் நடந்த ஆண்டு நாணயக் கொள்கை மீளாய்வு கூட்டத்திலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களுக்காக, சிறிலங்கா அரசாங்கம் நிதியைத் திரட்டுவதற்கு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!