டெல்லியை வாட்டி எடுக்கும் கடும்குளிர்: பனிமூட்டம் காரணாமாக 500 விமானங்கள் தாமதம்!

டெல்லியில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. கடுமையான பனிமூட்டமும் காணப்படுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சில மீட்டர் தூரமே கண்ணுக்கு புலப்படுவதால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகினர். நண்பகல் வரையிலும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் ரெயில், விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பனிமூட்டம் காரணமாக 500 விமானங்கள் தாமதமாகியுள்ளன. 21 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 30 ரெயில்கள் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன. டெல்லியில் இன்று காலை 2.6 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவானது. சிம்லாவில் இன்று காலை 3 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்த நிலையில், சிம்லாவை விட கடும் குளிர் பிரதேசமாக டெல்லி காணப்பட்டது. காற்றின் தரமும் மிக மோசமாக இருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!