கனடாவில் ரெயில் தடம் புரண்டு விபத்து!

கனடாவின் கிழக்கு பகுதியில் உள்ள மனிடோபா மாகாணம் சர்ச்சில் நகரில் இருந்து தலைநகர் வின்னிபெக் நகருக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் அங்குள்ள மெக்கிராகோர் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் தடம் புரண்டது. இதில் ரெயிலின் என்ஜின் மற்றும் 2 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி அருகில் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்தன. எனினும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

அதே சமயம் தடம்புரண்ட 2 ரெயில் பெட்டிகளில் பயணம் செய்த 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். ரெயில் தடம்புரண்டதற்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விரிவான விசாரணை நடத்த அந்த நாட்டு ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!