அரசியலமைப்பு சபையை ஒழிக்க வேண்டும்!

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரம் அரசியல் அமைப்பு சபையில் அங்கம் வகிக்கும் அரச சார்பற்ற பிரதிநிதிகளிடம் இருப்பதால் அரசியல் அமைப்பு திருத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

´மக்கள் நேரடியாக வாக்களித்து நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளனர். ஆனால் பாராளுமன்றம் அந்த நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பங்கை கொள்ளையடிக்கின்றது. அதுதான் கடந்த அரசாங்கத்தின் அரசியல் யாப்பு உருவாக்கத்தின் போது இடம்பெற்றுள்ளது. எனவே இதனை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாது.

மக்கள் வழங்கும் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்க வேண்டும். அரசியல் அமைப்பு சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு பதவிக்காலம் என்ற ஒன்று உள்ளது. ஆகவே உத்தியோகப்பூர்வ பதவி காலம் முடிவடையும் வரை அவர்களை பதவியில் இருந்து அகற்ற முடியாது. 19 திருத்தச்சட்டத்தில் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே அரசியல் அமைப்பு சபையின் கலாசாரத்தை மாற்றப்பட வேண்டும். ஆனால் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் இருந்தால் அந்த சபை அவ்வாறு இருப்பதில் பிரச்சினையில்லை. ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தும் அரசியலமைப்பு மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அதனூடாக மக்களின் இறையாண்மையை பலப்படுத்துகிறது. மார்ச் 5ஆம் திகதிக்கு பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க விரும்புகிறது.

அவர்கள் ஏப்ரல் 21 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதற்கு அஞ்சுகின்றனர் காரணம் அவர்கள் சஹாரனுக்கு பயப்படுகிறார்கள். சிறந்த இயந்திரத்தை உடைய ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமக்கு சிரிப்பில் கடலை காணமுடியும். எனவே எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்கால செயற்பாடுகளுக்கு அமைய பார்த்தால் ரணில் சஜித்தைவிட சிறந்தவர் என்பது புலப்படுகின்றது.“ என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!