நில ஆய்­வுக்­காக மலைப்பகு­தி­ ஊ­டாக பய­ணிக்­கையில் விபத்து – விசா­ரணை நடத்­தப்­படும் என்­கிறார் சமல்

விபத்­துக்­குள்­ளான விமா­னப்­ப­டையின் விமா­ன­மா­னது கிழக்கில் நில ஆய்வு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மலைப்­ப­கு­தி­யூ­டாக பயணித்துக்­கொண்­டி­ருந்த போது மலை­யொன்றில் மோதியே விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் இந்த விபத்து சம்­பவம் தொடர்­பாக விரி­வான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் சமல் ராஜ­பக்‌ஷ நேற்று வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று பிற்­பகல் ஒரு மணி­ய­ளவில் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடியபோது ஹப்­புத்­த­ளையில் இடம்­பெற்ற விமான விபத்து சம்­பவம் தொடர்­பாக எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­வினால் சில கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இதன்­போது எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தாச தெரி­விக்­கையில்,

விமானப் படையின் வை-12 ரக விமா­ன­மொன்று வீர­வி­லவில் இருந்து இரத்­ம­லானை நோக்கி பய­ணிக்கும் போது விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக தெரிய வந்­துள்­ள­துடன் இதில் விமானப் படையை சேர்ந்த 4 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என அறி­ய­மு­டி­கின்­றது. எவ்­வா­றா­யினும் இந்த சம்­பவம் உண்­மை­யாக இருக்கக் கூடாது என்றே நான் இவ்­வே­ளையில் பிரா­ர்த்­திக்­கின்றேன். எவ்­வா­றா­யினும் இந்த சம்­பவம் இடம்­பெற்­றி­ருந்தால் எதிர்க்­கட்சி சார்­பிலும் சபையில் அமர்ந்­துள்ள அனைவர் சார்­பிலும் எமது ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன் என்றார்.

இதனைத் தொடர்ந்து இச்சம்­பவம் தொடர்­பாக கருத்து தெரி­வித்த பாது­காப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜ­பக்‌ஷ குறிப்­பி­டு­கையில், குறித்த விமானம் இரத்­ம­லா­னை­யி­லி­ருந்து வீர­வி­ல­வுக்கு சென்று பின்னர் அங்­கி­ருந்து மலைப் பிர­தே­சத்­திற்கு சென்று கிழக்கு நிலப்­ப­கு­தியில் ஆய்வு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­காக சென்­று­கொண்­டி­ருந்த போது விமானம் சற்று தாழ்­வாக பறந்­து­கொண்­டி­ருந்த வேளையில் ஹப்­புத்­தளை பகு­தியில் மலை­யொன்றில் மோதி விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள­தா­கவே அறிய முடி­கின்­றது.

இதில் இரண்டு விமா­னி­களும் இரண்டு ஆராய்ச்சி உத­வி­யா­ளர்­களும் பய­ணித்­துள்ள நிலையில் அவர்கள் நால்வரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக எமது கவலையை தெரிவித்துக்கொள்வதுடன் இதுபற்றி விரிவான விசாரணை நடத்தப்படும். அதன் விசாரணை அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க விரைவில் நடவடிக்கையெடுப்போம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!