“நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அனைத்து விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்க மத்திய வங்கி தயார்”

புதிய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு அவசியமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு மத்திய வங்கி தயாராகவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராக நான் நியமிக்கப்பட்டிருப்பதை, நாட்டின் விரிவான அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய வாய்ப்பொன்றாகவே கருதுவதாகவும் மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷ்மன் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் இவ்வருடத்திற்கான கொள்கைகள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வு ஆளுநர் பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷ்மன் தலைமையில் மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புதிதாக மத்திய வங்கி ஆளுநர் ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் அவர் தெளிவுபடுத்தவிருக்கிறார். இத்தகைய தெளிவுபடுத்தல் வருடத்தில் முதலாவது கிழமையில் நடைபெறுவதே வழமை என்கிற போதிலும், இம்முறை பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரை இடம்பெறும்வரை தாமதிக்க வேண்டியேற்பட்டதாக மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!