இலங்கை மக்களுக்கு கோட்டாபயவின் ஒரு மகிழ்ச்சியான செய்தி…!!

நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களுக்கும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வீட்டு வசதிகள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்கள் கருத்து தெரிவிக்கையில் நிர்மாணப்பணிகளுக்கான திட்டங்களின் போது நிலவும் கடுமையான சட்ட திட்டங்கள் மற்றும் நீண்டகால தாமதம் காரணமாக மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

ஆகவே நடைமுறையில் உள்ள கடுமையான சட்ட திட்டங்களை இலகுபடுத்தி, மக்கள் பிரச்சினைகளை குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என தெரிவித்தார்.மேலும் முதன்முறையாக வீடொன்றை கொள்வனவு செய்யும் ஒருவருக்கு நீண்டகால கடன் மற்றும் நிவாரண வட்டி முறைமையின் கீழ் கடன் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என அவர் குறிப்பிடடுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில் மாகாண மற்றும் பிரதேசங்களுக்கு ஏற்ப முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கண்டறிந்து அவற்றுக்கான அனுமதியையும் அரசாங்க நிறுவனங்களினூடாகவே மேற்கொண்டு முதலீட்டுச் சபைக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!